Jump to content

User:M.Raviendranathan

From Wikipedia, the free encyclopedia

XAVIER S THANINAYAGAM. உலகத்தமிழ்த்தந்தை-சேவியர் எஸ் தனிநாயகம்-Revrant Xavier S THANINAYAGAM பிறப்பு-02-08-1913.Karampon Kayts.கரம்பொன்.ஊர்காவல்துறை. இறப்பு-01-09-1980.JAFFNA-யாழ்ப்பாணம். இவரது சிறப்பு ஈழத்தமிழ் நாட்டின் நெடுந்தீவு தந்தையின் பிறப்பிடம் கரம்பொன் இவரது தாயாரின் பிறப்பிடம் இவர் பிறந்ததும் கரம்பொன் எனும் நகரம் இலங்கைத்தீவுக்கே தலைநகரமாக திகழ்ந்தது இந்த ஊர்காவல்துறை.ஆங்கிலத்தில் KAYTS என்பது ஒல்லாந்தரின் வருகையின் போது வந்த கப்பல் கப்டனின் பெயர்தான் கயிட்ஸ் என்பது என்று வரலாறு குறிப்பிடுகின்றது. தனி நாயகம் அடிகளார் கத்தோலிக்க குருவாக உருவாகக்காரணமாக இருந்தது பெற்றோரது விருப்பம்.இவரது பெற்றோர் வழி வழியாக சைவ ப்பரம்பரையைச் சேர்ந்தவர்கள்.போர்த்துக்கல்காரர்கள் 16ம் நூற்றாண்டில் இலங்கைக்குள் வருகை தந்ததின்பின்தான் கத்தோலிக்க சமயம் இலங்கைக்குள் புகுந்தது என்பது வரலாறு. இவர் தான் மேற்கொண்ட கத்தோலிக்க குருபீடக்கல்வியை தொடரும்போது சிறப்பான எழுத்து வல்லமையும் ஆங்கிலப் புலமையும் பெற்றவராக திகழ்ந்தார்.சிறு வயதிலேயே இவரது ஆற்றலுக்கு உரியசிறப்பான மதிப்புக்கிடைத்தது என்று இவருடன் வாழ்ந்தவர்கள் சாட்சியம் சொல்லி நிற்கின்றார்கள்.ஆனாலும் இவர் தான் தமிழ்ப் பரம்பரையைச் சேர்ந்தவர் என்பதை இத்தாலியில் கல்வி பயிலும்போது தான் உணர்ந்தவராக இவரது செயல்ப்பாடுகள் சுட்டிக்காட்டுகின்றன. இத்தாலியில் ஆன்மீகக்கல்வியில் சிறப்புப்பட்டம் பெற்றபொழுதுதான் நான் யார் என் வரலாறு என்ன என்பதை உணர்கின்றார் உலக அரங்கில் மற்ற மொழிகள் சம்பந்தமான ஆய்வுகளை அந்தந்த மொழி ஆர்வலர்கள் நடாத்திய பொழுது அதில் கலந்து கொள்கின்றார்.அப்பொழுது எனது தாய் மொழியாம் தமிழ்மொழியில் இதனைவிடச்சிறப்பான விடய்ங்கள் இருக்கின்றனவே உலகத்து மொழிகழுக்கெல்லாம் உயிர் கொடுத்த மொழியான தமிழ்மொழியை ஆய்வு செய்து இவர்கழுக்கும் அதன் சிறப்பைச்சொல்லவேண்டும் என்கின்ற எண்ணம் இவரிடம் எழுகின்றது. இங்குதான் தமிழ்த்தாய் இவரை நீ ஏன் பூமியில் மானிடனாய் அவதரித்தாய் என்பதனை உணர்த்துகின்றாள்.ஆன்மீகப்பணிக்காக உலகநாடுகழுக்குப் பயணம் மேற்கொள்ளும்போது அதனைப்பயன்படுத்தி தமிழ் ஆய்வு நடாத்துவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்கின்றார்.