User talk:Ndsr

Page contents not supported in other languages.
From Wikipedia, the free encyclopedia

Welcome!

Hello, Ndsr, and welcome to Wikipedia! Thank you for your contributions. I hope you like the place and decide to stay. If you are stuck, and looking for help, please come to the Wikipedia Boot Camp, where experienced Wikipedians can answer any queries you have! Or, you can just type {{helpme}} on your user talk page, and someone will show up shortly to answer your questions.

Here are a few good links for newcomers:

I hope you enjoy editing here and being a Wikipedian! Please sign your name on talk pages using four tildes (~~~~); this will automatically produce your name and the date. If you need help, check out Wikipedia:Where to ask a question, ask me or a helper Commander Keane on our talk page. Again, welcome!

If you want to tell me something or if you just want to say hi, leave your message under the Talk Section of | My Talk Page

Anonymous anonymous 09:36, 12 April 2006 (UTC)[reply]

Giant magnetocaloric[edit]

I deleted "Giant magnetocaloric Discovery of GMCE in 1997" because it qualified as {{empty}}. But it may well be interesting. If you wish to write a short article on the subject, please do so. -- RHaworth 10:29, 12 April 2006 (UTC)[reply]

பருவதராஜகுலம்[edit]

பரதவர் பரதவர்- தென் திசை மன்னர் பரதவர்,பரவர்,பரதர் அல்லது பரதகுல ஷத்ரியர் என்போர்,தமிழகத்தின் மிக பழமையான சாதியினர்.பாண்டிய வம்சத்தைத் தோற்றுவித்தவர்கள் அவர்களே.மீன் கொடியினை கொண்டு முதல் தமிழ் அரசை தோற்றுவித்தவர்கள் பரதவர்கள்.இயற்கை சீற்றங்களால் எல்லை மாறுதல்கள் ஏற்பட்டபோது போர் மறவர்களாக மாறி மற்ற அரசுகளை வீழ்த்தி ஏகாதிபத்தியம் நிலைநாட்டியவர்கள்.பல நூற்றாண்டுகளாக பரவர்களாகவும் மறவர்களாகவும் நாடாண்டவர்கள் பரத பாண்டியர்கள். முத்துக்குளித்தல்,மீன் பிடித்தல்,சங்கறுத்தல்,உப்பு விளைத்தல் போன்றவை இவர்களது தொழில்கள்.பல சங்க இலக்கியங்கள் இவர்கள் புகழைப் பாடுகின்றன.இவர்கள் சந்திர வம்சத்தினர்.பரத நாடு முழுமையையும் ஆண்ட பரத மன்னன் இவர்கள் வழிவந்தவனே. பல்வேறு கல்வெட்டுக்கள் மற்றும் சங்க இலக்கிய நூல்கள் இந்த பரதவர்களின் சிறப்பை உரைக்கின்றன.பதினைந்தாம் நூற்ற்றாண்டின் இடைப்பகுதியில் இவர்கள் இசுலாமியர்களால் ஒடுக்கப்பட்டு பின் கிறிஸ்தவ மறையைத் தழுவினர்.முன்நாட்களில் பாண்டியர் என்றும்,படையாட்சியர்,வில்லவராயர்,பூபாலராயர்,பாண்டியதேவர்,சிங்கராயர், என்றெல்லாம் அழைக்கப்பட்டவர்கள் இன்று பெர்னாண்டோ,மச்சாடோ,மச்காறேன்ஹாஸ்,ரோட்ரிகோ என்ற போர்த்துகீசிய பெயர்களால் அழைக்கபடுகிறார்கள்.


நெய்தல் நில மன்னர்கள்.

கடலும், கடல் சார்ந்த பகுதியில் வாழும் நெய்தல் நில மக்களாக பரதவர் குறிக்கப்படுகின்றனர்.. பரதவர்களுக்கு நீண்ட வரலாற்றுப் பின்னணி உண்டு. கப்பல் ஓட்டுவதிலும் கடல்வள வாணிபத்திலும் - சிறப்புற்று விளங்கிய இவ்வினம் பற்றி – பல வரலாற்று ஆசிரியர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அத்தகைய ஆய்வுகளை ஒன்று திரட்டி யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை விரிவுரையாளர் கலாநிதி ப.புஸ்பரட்டினம் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகளை திரட்டி “நெய்தல் நிலத்து மன்னர்கள்” என்ற தலைப்பில் இக்கட்டுரை சமர்ப்பிப்பதில் பெருமகிழ்வடைகின்றேன்.

சங்ககாலத்தில் கடலும் கடல் சார்ந்த பகுதியிலும் வாழ்ந்த நெய்தல் நில மக்களாகப் பரதவர் குறிக்கப்படுகின்றனர். இவர்கள் சில இடங்களில் பரவர் எனவும், பல இடங்களில் பரதவர் எனவும் குறிக்கப்படுகின்றனர். இவற்றில் இருந்து தென்தமிழ் நாட்டின் கிழக்குக் கரையில் அமைந்த காவிரி நதிப்படுக்கைக்கும் தாமிரபரணி ஆற்றிட்கும் இடைப்பட்ட பகுதியில் இச்சமூகம் வாழ்ந்ததை அடையாளம் காண முடிகிறது. (ளுநநெஎசையவநெ 1985: 49 – 50) இவை தற்கால திருநெல்வேலி இராமநாதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி எனக் கூறலாம். தொலமி, சோழ நாட்டிற்கும், பாண்டி நாட்டிற்கும் இடைப்பட்ட கடல் சார்ந்த பகுதியில் வாழ்ந்த மக்களை பதை எனக் கூறுகிறார். இது பரதவரைக் குறிக்கலாம் (ஏநடரிpடைடயi 1980: 13) பரதவரின் முக்கிய தொழிலாக சங்க இலக்கியத்தில் சங்கு, முத்துக்குளித்தல், மீன்பிடித்தல், வர்த்தகம் என்பனவும் குறிக்கப்படுகின்றன. பாண்டி நாட்டு செல்வமாக இருந்த முத்து பற்றி சங்க இலக்கியத்திலும், வடமொழி இலக்கியத்திலும் பல குறிப்புக்கள் உள்ளன.

புறநானூறு முத்துக்குளித்தலில் ஈடுபட்ட பரதவரை பாண்டிய மன்னன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போதிலும் சோழ மன்னருக்கு அவர்கள் சவாலாக விளங்கியதாகக் கூறுகிறது (புறம் 378’1) பெரிபுளஸ் என்ற நூலில் முத்துக்குளித்தலில் ஈடுபட்ட மக்களை பாண்டிய மன்னன் தனது சிறையில் அடைத்ததாகவும், சிறைத்தண்டணை பெற்ற மக்களைப் பாண்டிய மன்னன் முத்துக்குளித்தலில் ஈடுபடுத்தியதாகவும் கூறுகிறது. (ளுஉhழகக 1912: 46) முத்துக்குளித்தலில் பாண்டிய மன்னருக்கும் பரதவருக்கும் பிற்காலத்திலும் பகைமை இருந்ததை நெடுஞ்செழியன் பராந்தகன் வேள்விக்குடிச்செப்பட்டில் வரும் பரவரைப் பாழ்படுத்தும் என்ற சொல் உறுதிப்படுத்துகிறது. (முருகானந்தம் 1990, 3) முத்துக்குளித்தலைப் போல் சங்கு குளித்தலும் முக்கிய தொழிலாக விளங்கியது. பரதவர் சங்குகளுக்காக கடலுக்குள் மூழ்கியதையும் அவற்றை கள்ளுக்காக விற்றது பற்றியும் அக நானூறு கூறுகிறது. (அகம் 296- 8, 9, 350: 11-13) – பாண்டி நாடு நெடுகிலும் சங்கும் முத்தும் விற்பனை செய்யப்பட்டதை மதுரைக்காஞ்சி கூறுகின்றது. பாண்டிய மன்னர் வெள்வளை தரித்ததாக சின்ன மன்னூர் செப்பேடு கூறுகிறது. (ளுஐஐ.3:4)

பரதவரின் இன்னொரு தொழிலாக மீன் பிடித்தலும் வர்த்தகமும் விளங்கியது. முத்து பாண்டியரின் சொத்தாக விளங்கியது போல் மீன் பாண்டியரின் பிரதான உணவாக இருந்தது. சங்க இலக்கியத்தில் மீன் என்ற சொல் பெருமளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறுந்தொகையில் வரும் மீன் வேட்டம். திமில் வேட்டுவர் என்ற சொல்லாட்சி மீன்பிடித் தொழிலின் சிறப்பைக் காட்டுகிறது. (குறு 123)- பரதவர் காய விட்ட மீனை (உப்புக்கண்டம்) விற்பனைக்காக படகுகளில் கொண்டுவந்ததாக மதுரைக்காஞ்சி கூறுகிறது. வர்த்தகத்தில் குதிரை வெளிநாட்டு வர்த்தகப்பொருளாகவும் திகழ்ந்தன. பட்டினப்பாலையும் (பட்டினப் 185 – 193) மதுரைக்காஞ்சியும் (மதுரை 321. 323) மேலை நாட்டுக் குதிரைகளும் வட இந்தியக் குதிரைகளும் தென்னிந்தியத் துறைமுகங்களுக்கு கொண்டுவரப்பட்டதாக கூறுகின்றன.

மதுரைக் காஞ்சி பாண்டி நாடு நெடுகிலும் குதிரை வர்த்தகம் நடந்ததாகக் கூறுகிறது. (மதுரை 315.24) இலங்கைப் பாளி நூல்கள் தமிழ் நாட்டு வணிகர் இலங்கையில் குதிரை வர்த்தகம் செய்ததாகக் கூறுகின்றன. இவ் வர்த்தகத்தில் பரதவர் ஈடுபட்டதாக செனவிரட்ண கூறுகிறார். பரதவர் கடலிலிருந்து எடுத்த உப்பை உமணர் உள்நாட்டில் விற்பனை செய்தார். நற்றிணையில் உமணர் வருகையை எதிர்பார்த்து உழாத உழவர் (பரதவர்) உப்பைக் குப்பைகளாக வைத்துக் காத்திருந்தனர் என்ற குறிப்புள்ளது. (நற் 138.12) பாண்டி நாட்டிலுள்ள சில பிராமிக் கல்வெட்டுக்கள் உப்பு வணிகர் பற்றிக் கூறுகின்றன. (ஆயாயனநஎயn 1966)

இவ்வாறு பலதரப்பட்ட பொருளாதார நடவடிக்கையில் பரதவர் ஈடுபட்டதினால் செல்வம் இவர்களிடத்தே குவிந்தன. சங்க இலக்கியத்தில் இவர்களது இருப்பிடங்கள், மாளிகைகள், கப்பல்கள், அலங்கார வண்டிகள், வாகனங்கள் பற்றி வரும் குறிப்புக்கள் இவர்களின் செல்வ நிலையை காட்டுகின்றன. (மதுரை 315. 323 பெரும்பாண் 319, 324 அகம் 86) புற நானூறில் வரும் ‘தென் பரதவர் மிடல் சாய’ என்ற சொற்றொடர்களும், பாண்டிய நெடுஞ்செழியனை கொற்றவன் காவலன் ‘பரதவ தலைவன்’ எனவும் கூறப்படுவது சங்ககால அரசியலிலும், சமூகத்திலும் பரதவருக்கிருந்த மதிப்பைக் காட்டுகின்றது.

இலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் பரத என்ற பெயருக்குரியவர்கள் ஆற்றிய தொழில்கள், பதவிகள், சமூக அந்தஸ்து என்பவற்றை நோக்கும் போது சங்க இலக்கியத்தில் வரும் பரதவ சமூகத்தை அப்படியே நினைவுபடுத்துவதாக உள்ளன. சங்க இலக்கியங்களில் பரதவ சமூகம் வர்த்தகத்தில் ஈடுபட்டது பற்றிக் கூறப்படுவது போல், இலங்கை வரலாற்று இலக்கியங்களில் எந்தவித குறிப்பும் காணப்படவில்லை. ஆனால் இக்காலத்தில் தமிழர்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டது பற்றி ஆக்காங்கே சில குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. செனிவரட்னா இலங்கையில் பரதவர் பற்றிவரும் பெரும்பாலான கல்வெட்டுக்கள் பெருங்கற்கால கறுப்பு – சிவப்பு மண்டபங்கள் காணப்படும் இடங்களை அண்டிய பகுதியில் காணப்படுவதை சான்றாதாரம் காட்டி வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து பரதவர் இலங்கை வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கூறுகிறார். (1985 : 49) அநுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அகழ்வாய்வில் குடியேற்றத்தின் ஆரம்பகாலச் சான்றுகளுடன் இலங்கையில் கிடைக்கப்பெறாத பளிங்குக் கற்கள், மணிகள், குதிரை எலும்பின் எச்சங்கள் கிடைத்துள்ளன. (ஊழniபொயஅ 1996 : 81) இவை வணிக குடியேற்றம் நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.

தமிழ் நாட்டில் பரதவர் வாழ்ந்த இடங்களில் ஒன்றாகப் பாண்டி நாட்டிலுள்ள தாமரபரணி ஆற்றங்கரை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதே இடப்பெயர் வடமேற்கு இலங்கையில் உள்ள ஒரு இடத்தின் பெயராக கி.மு.6ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டு, பின்னர் முழு இலங்கைக்குரிய பெயராக மாறியதை அசோகன் காலக் கல்வெட்டிலும், கி.பி.1.2.ஆம் நூற்றாண்டுக்கு உரிய வெளிநாட்டார் குறிப்புக்களிலும் காணமுடிகிறது. இவ்விடப் பெயர் ஏற்பட பாண்டி நாட்டிலுள்ள தாமரபரணி ஆற்றங்கரையிலிருந்து ஏற்பட்ட வர்த்தக குடியேற்றம் ஒரு காரணமாக இருக்கலாமென கூறுவோருமுளர். ஆனால் இலங்கையில் கி.மு.6ஆம் நூற்றாண்டிலிருந்து அறியப்படும் இப்பெயர் தமிழ் நாட்டு வலலாற்று மூலங்களில் கி.பி.12ஆம் நூற்றாண்டின் பின்னரே காணப்படுகின்றன. இவற்றை நோக்கும் போது இரு பிராந்தியத்திலும் வாழ்ந்த பரதவ சமூகத்தினருக்கு இடையிலான வர்த்தகப் பண்பாட்டுத் தொடர்பால் இங்கிருந்தே அப்பெயர் தமிழ் நாட்டிற்கு சென்றதா என எண்ணத் தூண்டுகிறது.

பரத பற்றி வரும் கல்வெட்டுக்களில் பொலநறுவை மாவட்டத்தில் உள்ள தூவகெல என்ற இடத்தில் காணப்படும் கல்வெட்டு சிறப்பாக குறிப்பிடத்தக்கது. (வழக்கத்திற்கு மாறாக இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக எழுதப்பட்டுள்ள இககல்வெட்டில் பரதஸ ஹகிதஸ (டீயசயவயளயலய மவையளய) என்பவன் கொடுத்த குகை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் பரத என்ற பெயருக்கு முன்னால் கப்பலின் உருவம் வரையப்பட்டுள்ளது. (ஏறத்தாழ இதையொத்த கப்பல் உருவம் தமிழ் நாட்டில் அழகன் குளம் அகழ்வாய்வின் போது கி.மு.2.1 ஆம் நூற்றாண்டுக்குரிய ரௌலட்டட் மண்டபத்தில் பெறப்பட்டுள்ளது.) இது பரத என்பவனை கப்பல் தலைவனாக அல்லது, வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்ட வணிகனாக கருத இடமுண்டு. தொலமி பாண்டி நாட்டுக் கடற்கரைப் பகுதியில் தரித்து நின்ற கப்பல் பற்றி தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். சங்க இலக்கியத்தில் அம்பி, நாவாய், வங்கம், படகு, தொணி, பங்றி, திமில் என்பன கடற்போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்ட கலன்களாக குறிப்பிடப்பட்டு உள்ளன. இதில் திமில், அம்பி என்பன மீன் பிடித்தலுக்கும் பெரிய கப்பலிலிருந்து பொருட்களை துறைமுகங்களுக்கு கொண்டு வரவும் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறது. வங்கம், நாவாய் நீண்ட கடற்பயணத்திற்கும் வர்த்தகத்திற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. (சுப்பராயலு 1983 : 161 – 162) இலங்கையில் தமிழ் வணிகனாகிய நாவாய் தலைவன் தென்னிந்தியாவில் இருந்து குதிரையை கொண்டு வந்து விற்பனை செய்ததாக பாளி நூல்கள் கூறுகின்றன. நாயன்மார் பாடல்கள் வங்கம் நிறைந்த துறை முகமாக வட இலங்கையில் உள்ள மாதோட்டத்தைக் கூறுகின்றன. (மயினைகிளார் 1953) இதனால் பொலநறுவைக் கல்வெட்டில் வரும் கப்பல் உருவத்தை பாளி, தமிழ் இலக்கியங்கள் கூறும் நாவாய் அல்லது வங்கமாகக் கருதலாம்.

கல்வெட்டுக்கள் சிலவற்றை நாவிக என்ற பெயருடன் படகெ, தொட என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. புரணவிதாண இவை கடற்போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட கலன்கள் எனக் கூறுகிறார். இதில் படகெ, தொட என்ற சொற்கள் தமிழில் வழக்கில் உள்ள படகு, தோணி போன்ற சொற்களுடன் தொடர்புபடுத்த இடமுண்டு. அண்மையில் பிரித்தானிய nஐர்மன் ஆய்வுக் குழுவினர் அநுராதபுர பகுதியில் மேற்கொண்ட அகழ்வாய்வின் போது கி.மு.3ஆம் நூற்றாண்டுக்குரிய சங்ககால நாணயங்களையும் கடற்போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்ட கலம் ஒன்றின் உருவம் பொறித்த நரைநிற மட்பாண்ட ஓடு ஒன்றையும் கண்டுபிடித்துள்ளனர். (ஊழniபொயஅ 1996இ92) இதில் உள்ள கடற்கலத்தை கல்வெட்டுக்களில் வரும் படகெ. தோட போன்ற சொற்களுடன் தொடப்பு படுத்தலாம். இதையொத்த உருவத்தை தமிழ் நாட்டில் புதிய கற்கால ஓவியங்களிலும் சாதவானகர் கால நாணயங்களிலும் காணமுடிகிறது. இவ் ஆதாரங்களில் இருந்து சங்க காலத்திற்கு முன்பு இருந்தே இலங்கைக்கும் தமிழ் நாட்டிற்கும் இடையே கடல் வாணிபத் தொடர்புகள் இருந்ததென உறுதிப்படுத்தலாம். இவை பொலநறுவைக் கல்வெட்டில் வரும் பரத என்பவனை அயல் நாடுகளுடன் கடல் வாணிபத்தில் ஈடுபட்டவனாகக் கருத இடமளிக்கிறது.

சங்க இலக்கியத்தில் பரதவரின் முக்கிய தொழில்களில் ஒன்றாக முத்து, சங்கு குளித்தல் குறிப்பிடப்பட்டுள்ளது. இத் தொழில்கள் பாண்டி நாட்டிற்கும் வடமேற்கு இலங்கைக்கும் இடைப்பட்ட கடற்பிராந்தியத்தில் நடந்ததற்கு போதிய சான்றுகள் உண்டு. இந்தியாவைக் காட்டிலும் இலங்கையில் தரமான முத்து கிடைத்ததாக கி.மு.4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மெகத்தனில் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இக்காலப் பகுதியில் ஆட்சிபுரிந்த இலங்கை மன்னர்கள் சிலர் இந்திய மன்னர்களுக்கு முத்தை பரிசாக கொடுத்ததாக பாளி நூல்கள் கூறுகின்றன. பண்டு தொட்டு வடமேற்கு இலங்கையில் உள்ள சிலாபம் என்ற இடம் முத்துச் சிலாபம் என்ற பெயரை பெற்றிருந்ததற்கு இங்கு நடைபெற்று வரும் முத்துக் குளித்தலே முக்கிய காரணமாகும். பரத என்ற பெயருக்குரிய பிராமிக் கல்வெட்டுக்களில் கணிசமானவை இப்பிராந்தியத்திலிருந்து கிடைத்திருப்பது இத்தொழில்களோடு இவர்களுக்கிருந்த தொடர்பைக் காட்டுகிறது எனலாம்.

பண்டைய இலங்கையில் மீன்பிடித் தொழிலோடு பரத என்ற பெயருக்குள்ள தொடர்பைக் காட்ட கல்வெட்டுக்களிலோ அல்லது பாளி இலக்கியங்களிலோ இதுவரை சான்றுகள் கிடைக்கவில்லை. ஆனால் அண்மையில் தென்னிலங்கையில் கிடைத்த கி.மு.2ஆம் நூற்றாண்டுக்குரிய நாணயம் ஒன்றில் இதற்குரிய சான்று கிடைத்துள்ளது. இங்கு இதே காலத்திற்குரிய உதிரன், தஸபிடன், மஹசாத்தன், கபதிகடலன் போன்ற தமிழ் நாணயங்களுடன் பரததிஸ என்ற பெயர் பொறித்த நாணயம் ஒன்றும் கிடைத்துள்ளது. (டீழிநசயசயஉhஉhi 1999: 53, புஷ்பரட்ணம் 1999: 55 – 70) இதில் காணக்கூடிய சிறப்பு என்னவெனில் பின்புறத்தில் பரததிஸ என்ற பெயரும் முன்புறத்தில் இரு மீன்கோட்டுருவமும் இடம்பெற்றிருப்பதாகும். இதில் வரும் மீன் சின்னங்கள் மீன்பிடி தொழிலோடு பரததிஸ என்பவனுக்குள்ள தொடர்பைக் காட்டுகின்றது. இதில் முன்னொட்டுச் சொல்லாக வரும் பரத என்பது பரதவ சமூகத்தைக் குறிக்கலாம். பின்னொட்டுச் சொல்லாக வரும் திஸ என்ற பெயருக்கு பூச நட்சத்திரம் என்ற பொருள் உள்ளது (இராசகோபால்). இப்பெயர் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களிலும், பாளி இலக்கியங்களிலும் பல இடங்களில் வருகிறது. இப்பெயரில் குறுநில மன்னர்களும், சிற்றரசர்களும் இருந்துள்ளனர். இது பிராகிருத மொழிக்குரிய பெயராக இருப்பினும் இப்பெயரில் தமிழர்களும் இருத்ததற்குப் போதிய சான்றுகள் உள்ளன. அம்பாறை மாவட்டத்தில் குடுவில் என்ற இடத்திலுள்ள கி.மு.2ஆம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டொன்று தீகவாபி என்ற இடத்தில் வாழ்ந்த திஸ என்ற தமிழ் வணிகன் பற்றிக் கூறுகிறது. அநுராதபுரத்தில் கிடைத்த கல்வெட்டொன்று திஸ தமிழன் தமிழ் வணிகர்களுடன் ஒன்று சேர்ந்து ஒரு குழுவாக வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கூறுகின்றது. அண்மையில் தமிழ் நாட்டில் அழகன் குளம் என்ற இடத்தில் கிடைத்த மட்பாண்டை ஓட்டில் தீசன் என்ற பெயர் பெறப்பட்டுள்ளது (இராசகோபால்). பேராசிரியர் சிற்றம்பலம் சங்க இலக்கியத்தில் வரும் திரையர் என்ற ஒரு இனக் குழுவைக் குறித்ததெனக் கொண்டால் அச்சொல்லிற்கும் இலங்கையில் பயன்பாட்டிலிருந்த திஸ, திஸ்ஸ என்ற பெயர்களுக்கும் இடையிலான தொடர்பு ஆராயப்படக் கூடியதென்பதற்கு சில சான்றாதாரங்களைக் காட்டியுள்ளார். திரை என்ற சொல்லுக்கு கடல், கடலலை, குளம் என்ற பல கருத்துக்கள் உண்டு. இலங்கையில் கிடைத்த பரத பற்றிய 21 கல்வெட்டுக்களில் 12 கல்வெட்டுக்கள் திஸ என்பனவை பரதவ (பரத) சமூகத்துடன் தொடர்பு படுத்திக் கூறுகின்றன. இதில் கல்வெட்டுக்களில் வரும் வணிகன், அரச தூதுவன், கப்பல் தலைவன் போன்ற பதவிகள் அனைத்தும் பரததிஸ என்பவனோடு தொடர்புடையதாக உள்ளன. தென்னிலங்கையில் கிடைத்த கி.மு.2ஆம் நூற்றாண்டுக்குரிய நாணயம் ஒன்று மீன் அமைப்பில் வடிவமைக்கப்பட்டு அதன் மத்தியில் “திஸஹ” என்ற பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. (டீழிநயசய உhiஉhi 1999: 60இ ழே- 43) இதை நாணயமாக கொள்வதைவிட திஸ என்பவனுக்குரிய முத்திரை எனக் கூறலாம். இவற்றிலிருந்து மீன் பிடித்தலோடு பரதவ சமூகத்திற்கும் திஸ என்ற பெயருக்கும் உள்ள தொடர்பு தெரியவருகிறது. இச்சான்றுகள் கடல் சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளோடு பரதவ சமூகத்திற்கும் திஸ, திஸய என்ற பெயருக்கும் உள்ள தொடர்பைக் காட்டுவதால் திரையர் என்ற இனக் குழுவுடன் திஸ என்ற பெயருள்ள உறவை தொடர்புபடுத்திப் பார்க்கலாம் என்ற கருத்திற்கு இவை மேலும் சான்றாக உள்ளன. செனிவரட்னா இலங்கையில் பரதவ சமூகத்தின் தோற்றத்தைப் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் தொடர்பு படுத்துகிறார். இதற்கு இச்சமூகம் பற்றிய கல்வெட்டுக்கள், பண்பாட்டு மையங்களை அண்டிக் காணப்பட்டதையே சான்றாகக் காட்டுகிறார். இன்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் பரதவ சமூகம் வாழ்ந்து வரும் இடங்களில் வட, வடமேற்கு இலங்கை சிறப்பாக குறிப்பிடத்தக்கது. இவற்றுள் பூநகரி வட்டாரத்திலுள்ள மண்ணித்தலை என்ற கடற்கரைக் கிராமத்தில் மேற்கொண்ட கள ஆய்வின்போது பெருங்கற்காலப் பண்பாட்டிற்குரிய பல சான்றுகளுடன் குறிப்பாக கறுப்பு சிவப்பு நிற மட்பாண்டங்கள் (டீடயஉம யனெ சநன றயசந) தமிழ் பிராமி எழுத்துப் பொறிந்த மட்பாண்ட ஓடுகள், இரும்புக் கருவிகள் என்பவற்றுடன் மீன் பிடிப்பதற்கென ஊசிகளும் (குiளா ர்ழமள) கிடைத்துள்ளன. (புஷ்பரட்ணம் 1993). பரத என்ற சொல்லின் இன்னொரு வடிவமாக கல்வெட்டுக்களில் வரும் பத என்ற சொல்லை எடுத்துக்கொண்டால் இப்பெயருக்குரியவர்கள் இலங்கையில் பரந்துபட்ட அளவில் வாழ்ந்தனர் எனக் கூறலாம்.


இவர்கள் வர்த்தகத்தில் மட்டுமன்றி அரசியல், கிராம நிர்வாகம், நீதி, படைத்துறை, கலை போன்ற பல துறைகளில் ஈடுபட்டிருந்தமை தெரிகிறது. குத்திக்குளம் என்ற இடத்தில் உள்ள கல்வெட்டு பதகுமார என்பவன் பௌத்த சங்கத்திற்கு அளித்த தானம் பற்றிக் கூறுகிறது. இதில் வரும் பதகுமர என்பதை பரதகுமார என எடுத்துக்கொள்ளலாம். சங்க காலத்தில் சிலப்பதிகாரம் பரதவ குமாரன் என அழைத்ததற்கு சான்றுண்டு. (சிலப் 156) அண்மையில் சேருவில் என்ற தமிழ் கிராமத்தில் கிடைத்த கல்வெட்டில் பதகம திஸ்ஸவும், தமிழ் சோழவும் (தமிட சுட) இணைந்து பௌத்த சங்கத்திற்கு தானம் அளித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது (ளுநநெஎசையவநெ 1985: 52). இதில் சோழர் தமிழராக குறிப்பிடப்பட்டமை சிறப்பாக நோக்கத்தக்கது. வட இலங்கையில் பதசுட என்ற சொல் சில கல்வெட்டுக்களில் வருகின்றன.

மேற் கூறப்பட்ட கல்வெட்டுக்களில் இருந்து சங்ககாலத்தைப் போல் சமகாலத்தில், இலங்கையிலும் பரதவ சமூகம் வாழ்ந்ததெனக் கூறலாம். சங்க இலக்கியத்தில் பரவர், பரதவர் என வரும் பெயர்கள் இலங்கைக் கல்வெட்டு மொழிக்கு ஏற்ப பத, பரத என மாற்றமடைந்திருக்கலாம். இதற்கு கல்வெட்டுக்களில் வரும் பிராகிருதமயப்படுத்தப்பட்ட தமிழ்ப் பெயர்கள் சம காலத்தில் வெளியிட்ட நாணயங்களில் தமிழில் இடம்பெற்றிருப்பதைச் சான்றாக கூறலாம். செனிவரட்னா பரத என்ற முன்னொட்டுச் சொல் திராவிட மொழிக்குரிய ஆய், மாற, மருமக என்ற பெயர்களுடனும், பிராகிருத மொழிக்குரிய சும, உதர, சுமலி போன்ற சொற்களுடனும் வருவதைச் சுட்டிக்காட்டுகிறார். ஆரம்பத்தில் இனக் குழுவைக் குறித்த பரதவ என்ற பெயர் பின்னர் சமூகப் பெயராக மாறியதாக ஒரு குருத்துண்டு. Nஐம்ஸ் ஆர்னலின் பரதவர், பரவர், பரதர் ஆகியோர் நாக இனக்குழுவை சார்ந்தவர் எனக் கூறுகிறார் (முருகானந்தம் 1990, 3) வட இலங்கை நாகதீவு எனவும், நாகர்கள் வாழ்ந்த இடம் எனவும் கூறும் வரலாற்று மரபுண்டு. இலங்கையில் பரத பற்றி வரும் கல்வெட்டுக்கள் பெருமளவுக்கு வட இலங்கையிலும், வடமேற்கு இலங்கையிலும் காணப்படுவதுடன் சில கல்வெட்டுக்களில் பரதநாக என்ற பெயர் இணைந்து வருவதையும் காணலாம். இதனால் பரத என்ற சமூகப் பெயர் இலங்கையில் வேறுபட்ட இனக் குழுக்களிடையே சமூகப் பெயராகப் பயன்படுத்தப்பட்ட போதிலும் அதன் செல்வாக்கு கூடிய அளவுக்கு வட, வடமேற்கு இலங்கையில் இருந்ததெனக் கூறலாம். இன்று பரதவ சமூகம் தமிழ் நாட்டில் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய திராவிட மொழி பேசும் பிராந்தியங்களிலும், இலங்கையில் சிங்கள, தமிழ் மொழி பேசும் வட்டார மக்களிடமும் காணப்படுகின்றன. வட, வடமேற்கு இலங்கையில் இப்பரதவ சமூகம் நீண்ட காலமாக வாழ்ந்து வருவதை இடைக்கால, மத்தியகால வரலாற்று ஆவணங்களிலிருந்து அறியமுடிகிறது. இதனால் இச்சமூகத்தின் தொடக்க கால ஆதாரமாக இப்பிராந்திய த்தில் காணப்படும் கல்வெட்டுக்களில் வரும் பரத என்ற பெயரைக் குறிப்பிடலாம்

If this is the first article that you have created, you may want to read the guide to writing your first article.

You may want to consider using the Article Wizard to help you create articles.

A tag has been placed on ParvataRajaKulam requesting that it be speedily deleted from Wikipedia. This has been done under section G12 of the criteria for speedy deletion, because the article or image appears to be a clear copyright infringement. This article or image appears to be a direct copy from http://learnsangamtamil.com/maduraikanchi/. For legal reasons, we cannot accept copyrighted text or images borrowed from other web sites or printed material, and as a consequence, your addition will most likely be deleted. You may use external websites as a source of information, but not as a source of sentences. This part is crucial: say it in your own words. Wikipedia takes copyright violations very seriously and persistent violators will be blocked from editing.

If the external website or image belongs to you, and you want to allow Wikipedia to use the text or image — which means allowing other people to modify it — then you must verify that externally by one of the processes explained at Wikipedia:Donating copyrighted materials. If you are not the owner of the external website or image but have permission from that owner, see Wikipedia:Requesting copyright permission. You might want to look at Wikipedia's policies and guidelines for more details, or ask a question here.

If you think this page should not be deleted for this reason, you may contest the nomination by visiting the page and clicking the button labelled "Click here to contest this speedy deletion". This will give you the opportunity to explain why you believe the page should not be deleted. However, be aware that once a page is tagged for speedy deletion, it may be removed without delay. Please do not remove the speedy deletion tag from the page yourself, but do not hesitate to add information in line with Wikipedia's policies and guidelines. Cindy(talk) 00:19, 8 December 2013 (UTC)[reply]