பிராணவாயு சிகிச்சை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருத்துவ மனையில் மூச்சுத் திணறல் உள்ள நோயாளிக்கு, முகமூடி மூலம், மூக்கு வழியாக நுரையீரலில் பிராணவாயு செலுத்தும் சிகிச்சை
மருத்துவத் தரவு
AHFS/திரக்ஃசு.காம் FDA Professional Drug Information
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
வழிகள் மூக்கு வழியாக நுரையீரலுக்கு செலுத்துதல்
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 7782-44-7
ATC குறியீடு V03AN01
ChemSpider none
UNII S88TT14065 Y
ஒத்தசொல்s தூய்மையான உயிர்வளி, தூய்மையான காற்று
வேதியியல் தரவு
வாய்பாடு O2


மூக்கு வழியாக பிராணவாயுவை குழாய் மூலம் செலுத்தும் முறை
ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிராணவாயு கலன்


பிராணவாயு சிகிச்சை அல்லது உயிர்வளி மருத்துவ முறை (Oxygen therapy), மூச்சுத் திணறல் பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு, மருத்துவமனையில் பிராணவாயுவை மூக்கு வழியாக நுரையீரலுக்கு நேரடியாக செலுத்தும் முறை ஆகும். இதனால் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் உடலில் உள்ள எல்லா திசுக்களுக்கும் போதிய பிராணவாயுவை எடுத்துச் செல்ல உதவுகிறது. இது மருத்துவ சிகிச்சையில் ஒரு பகுதியாகும்.[1] மேலும் இரத்தத்தில் பிராணவாயுவின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கும், நச்சு வாயுக்களை சுவாசித்ததால் ஏற்படும் மூச்சுத் திணறல் உள்ளவர்களுக்கும், கொத்துத் தலைவலி[2]உள்ளவர்களுக்கும் மற்றும் உள்ளிழுக்கும் மயக்க மருந்து கொடுக்கப்படும் போது நுரையீரலில் போதுமான பிராணவாயுவை பராமரிக்க பிராணவாயு சிகிச்சை வழங்கப்படுகிறது.[3]

நீண்டகாலம் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு க்ருதியில் குறைந்த அளவிலே பிராணவாயு இருக்கும். அவ்வாறு உள்ளவர்களுக்கு பிராணவாயு சிகிச்சை பயனுள்ளதாக இருக்கும்.[4][1] இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் உடலில் உள்ள எல்லா திசுக்களுக்கும் போதிய பிராணவாயுவை எடுத்துச் செல்ல உயிர்வளி சிகிச்சை உதவுகின்றன. நோயாளிகளின் மூக்கு வழியாக நைலான் குழாய் அல்லது முகமூடி குழாய் வழியாகவும் பிராணவாயு செலுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது.[5][6]மேலும் கொரானா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு நுரையீரல் அழற்சி ஏற்படுவதால், மூச்சுத் திணறல் ஏற்படும் போது பிராணவாயு சிகிச்சை வழங்கப்படுகிறது.

நாசிக் தொடருந்து நிலையத்தில் தூய்மையான பிராணவாயுவை சுவாசிப்பதற்கு கட்டணத்துடன் கூடிய பிராணவாயு அலகுகளை நிறுவியுள்ளனர்.[7]காற்று மாசு மிக்க தில்லி, பெங்களூரு மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் தூய பிராணவாயுவை சுவாசிப்பதற்கு கட்டணத்துடன் கூடிய அலகுகள் உள்ளது.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 British national formulary : BNF 69 (69 ed.). British Medical Association. 2015. pp. 217–218, 302. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780857111562.
  2. கிளஸ்டர் தலைவலி
  3. World Health Organization (2009). Stuart MC, Kouimtzi M, Hill SR (eds.). WHO Model Formulary 2008. World Health Organization. p. 20. hdl:10665/44053. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789241547659.
  4. Jamison DT, Breman JG, Measham AR, Alleyne G, Claeson M, Evans DB, Jha P, Mills A, Musgrove P, eds. (2006). Disease Control Priorities in Developing Countries (in ஆங்கிலம்). World Bank Publications. p. 689. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780821361801. Archived from the original on 2017-05-10.
  5. Macintosh, Michael; Moore, Tracey (1999). Caring for the Seriously Ill Patient 2E (in ஆங்கிலம்) (2 ed.). CRC Press. p. 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780340705827. Archived from the original on 2017-01-18.
  6. Dart, Richard C. (2004). Medical Toxicology (in ஆங்கிலம்). Lippincott Williams & Wilkins. pp. 217–219. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780781728454. Archived from the original on 2017-01-18.
  7. Indian Railways develops unique oxygen parlour to reduce pollution, provide clean air at station
  8. At Delhi’s first oxygen bar, breathe in ‘pure air’ for Rs 300

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராணவாயு_சிகிச்சை&oldid=3871364" இலிருந்து மீள்விக்கப்பட்டது