விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


வேங்கைத் திட்டம்

2017 - 2018 இல், விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து இணையம் மற்றும் சமூகத்துக்கான மையம், விக்கிமீடியா இந்தியா, இந்திய விக்கிமீடியா சமூகங்கள் மற்றும் பயனர் குழுக்களின் உறுதுணையுடன் இந்திய மொழி விக்கிப்பீடியாக்களில் உள்ளூர் வாசகர்களின் தேவைக்குத் தக்க உயர் தர கட்டுரைகளை உருவாக்கும் திட்டத்தை முன்னெடுக்கிறது. இத்திட்டத்தின் விளைவுகளை அறிந்து இந்தியாவிலும் உலகெங்கிலும் தக்கவாறு விரிவுபடுத்துவதற்காக, தற்போது சிறு அளவிலேயே இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இத்திட்டம் அ) இந்திய மொழி விக்கிப்பீடியர்களில் முனைப்பாகச் செயற்படும் அனுபவம் மிக்க விக்கிப்பீடியர்களுக்கு இணையம், கணினி தேவை அறிந்து உதவி நல்கும். ஆ) ஆங்கிலத்த்திற்கும் இந்திய மொழிகளிலும் உள்ள இணைய உள்ளடக்கத்தின் இடைவெளி அறிந்து அதனை நிரப்புவதற்கான கட்டுரைப் போட்டி ஒன்றை முன்வைக்கிறது.

இந்தக் கட்டுரைப் போட்டியில் ஆர்வம் உள்ள இந்திய மொழி விக்கிப்பீடியா சமூகங்கள் ஒன்றிணைந்து இக்கட்டுரைப் போட்டியை முன்னெடுக்கும். மூன்று மாதங்களுக்கு இப்போட்டி நடைபெறும். ஒவ்வொரு மாதமும் சிறப்பாகப் பங்களிப்பவர்களுக்குத் தனிப்பட்ட பரிசுகள் வழங்குவதுடன், ஒட்டு மொத்தமாகச் சிறப்பாகச் செயற்படுகிற விக்கிப்பீடியா சமூகத்துக்குத் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் பயிற்சி முகாம் ஒன்றும் நடத்தப்படும்.