Jump to content

User talk:Veyilaan

Page contents not supported in other languages.
From Wikipedia, the free encyclopedia

This is the current revision of this page, as edited by Veyilaan (talk | contribs) at 20:58, 8 March 2010 (கார்காத்தார்). The present address (URL) is a permanent link to this version.

(diff) ← Previous revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கார்காத்தார்

[edit]

கார்காத்தார், காராளர், காரைக்காட்டார் என்ற சொல் வேளாளரின் ஒரு பகுதியினரைக் குறிக்கும் சிறப்புச் சொற்கள்.

வேளாளர், வேளாண்மையர், வேள்வியாளர், வெள்ளாளர் இவைகளெல்லாம் பல காரணங்களால் திரிந்து வழங்கும் ஒரு சமூகத்தினரைக் குறிக்கும் சொற்கள். வேளாளர் என்போர் வருணாசிரம் தருமத்தில் வைசியர் என்னும் பிரிவில் உள்ளவர்கள். ஆதாரம் – வேளாளர் என்பவரின் தொழிலான வேளாண்மையைக் குறிக்கும் வடமொழிச் சொல் வைசிகம் ஆகும். எனவே வேளாளர் என்பவர் வைசியர் ஆவர். மேலும், ஸ்ரீ ஆறுமுக நாவலர் எழுதிய சூடாமணி நிகண்டில் செளமிய (1850) ஆண்டுப் பதிப்பில் 3 பாட்டுகள் நாம் வைசியர் என்பதை வலியுறுத்துவதாக உள்ளது.

ஸ்ரீ ஆறுமுக நாவலர் எழுதிய சூடாமணி நிகண்டு - http://noolaham.net/project/42/4165/4165.pdf


இவ்வேளாளரின் ஆதித் தோற்றம் பார்வதிதேவி-உமாதேவி ஆகும். வேளாளர் கங்காபுத்திரர் என அழைக்கப் பெறுவதால், வேளாளரின் பிறப்பிடம் கங்கை. அக்கங்கைக்கு ஆதாரம் உமாதேவி ஆகும் என புராண வரலாறு கூறுகிறது. எனவே வேளாளரின் தோற்றம் உமாதேவி தான் என அறியப்படுகிறது. உமை அளித்த எட்டு உழக்கு நெல்லைப் பெற்று வேளாண்மைத் தொழில் செய்து உலகத்தில் 32 அறங்களும் முட்டின்றி நடைபெற காரணகர்த்தர்களாக இருந்து நமது சமூகம் பொதுப்பணி ஆற்றி வந்திருக்கிறது. வெள்ளத்தைத் தடுத்து ஆண்டதால் வெள்ளாளர் என்றும் விளைவாளர் என்பது மருவி வேளாளர் என்றும், அரசரால் விரும்பிய தன்மையும், ஆண்மையுடைய தொழிலாக மந்திரித் தலைமையும், சேனைத் தலைமையும் செய்து வந்தமையால் வேளாண்மையர் என்றும், கரை அமைத்து விவசாயம் செய்து காணி ஆண்டமையால் கரையாளர், காணியாளர் என்றும் அழைக்கப்பெற்றனர்.

ஆரியர்கள் வட இந்தியாவில் வந்து குடியேறிய பிறகு இவர்கள் குலசேகர பாண்டியனால் நமது தமிழ் நாட்டுக்கு அழைத்து வரப்பெற்றதாகவும், இவர்கள் பாண்டி நாட்டில் உள்ள கள வேள்வி நாட்டுப் பகுதியில் குடியேறியதாகவுக் திருவிளையாடல் புராணம் கூறுகிறது. தற்சமயம் அருப்புக்கோட்டை தாலுகாவில் உள்ள வீரசோழம் என்னும் ஊர் களவேள்வி நாட்டின் பகுதியில் இருந்ததாகவும் அறியப்படுகிறது.

களவேள்வி நாட்டில் வேளாளர் குடியேறி இருந்து வரும் காலத்தில் ஒரு நாள் உக்கிரபாண்டியன் என்னும் அரசன் பொதியமலைச் சாரலில் வேட்டையாடச் சென்ற போது புட்கலா வர்த்தம் (பொன்), சங்காரித்தம் (பூ), துரோணம் (மண்), காளமுகி (கல்) என்னும் நான்கு மேகங்கள் பாண்டியன் பகுதியில் மழை பொழியாமல் மேயக் கண்டு, கோபமுற்று அவற்றை சிறையிலடைத்து விட்டான். இதனை அறிந்த இந்திரன் சேனைகளுடன், பாண்டியனோடு பொருதுவதற்கு வந்து ஆற்றாதவனாகி திரும்பச் சென்று பாண்டியனுக்கு முடங்கல் வரைந்தான். அதாவது, பாண்டிய நட்டில் மாதமொரு மழை பொழிய ஏற்பாடு செய்கிறேன். மேகங்களை விடுவித்து விடவும் என எழுதினான். அதைக் கண்ட பாண்டியன், இந்திரனின் கூற்றுக்கு யார் பிணை எனக்கேட்டான். அப்போது வேளாளன் ஒருவன் பிணையாக இருந்து மேகங்களை விடுவித்ததாக திருவிளையாடற் செய்யுள் 57, 58 ஆகியவைகளில் அறியக் கிடக்கிறது. மேற்கூறியவாறு காருக்கு (மேகத்திற்கு) பிணை கொடுத்ததால் அந்த வேளாளனுக்கு கார்காத்தான் என்ற காரணப்பெயர் வந்தது. அவனின் சந்ததியே நாம். எனவே கார்காத்தார், காராளர் என இரண்டும் காரணப் பெயர்கள். இதற்கு ஆதாரமாக கடம்புவன் புராணம், சிலப்பதிகாரம், திருவிளையாடற் புராணம் ஆகியவைகளில் பாக்கள் உள்ளன. மேகங்களைக் கட்டி வைத்த இடம் கட்டனூர் என்றும், சிறையிடப் பெற்ற இடம் இருஞ்சிறை எனவும் வழங்கப் பெற்றது. இவ்வூர்கள் அருப்புக்கோட்டை தாலுகாவில் உள்ளதே நமக்குச் சான்று.

இட்டவன் சிறையை நீக்கி யெழிலியை விடாது மாறு பட்டசிந் தையனே யாகப் பாகசா தனனுக் கென்றும் நட்டவ னொருவே ளாள னான்பிணை யென்று தாழ்ந்தான் மட்டவிழ்ந் தொழுகு நிம்ப மாலிகை மார்பி னானும்.

(இ - ள்.) இட்டவன் சிறையை நீக்கி எழிலியை விடாது - இடப்பட்ட வலிய சிறையினின்றும் நீக்கி முகில்களை விடாது, மாறுபட்ட சிந்தையனே ஆக - மாறுகொண்ட உள்ள முடையனாக, பாகசாதனனுக்கு என்றும் நட்டவன் ஒரு வேளாளன் - இந்திரனுக்கு எப்பொழுதும் நண்பினனாயுள்ள ஒரு வேளாளன், நான் பிணைஎன்று தாழ்ந்தான் - நான்பிணை என்று வணங்கினான்; அவிழ்ந்து மட்டு ஒழுகு நிம்பமாலிகை மார்பினானும் - மலர்ந்து தேனொழுகும் வேப்ப மலர் மாலையை யணிந்த மார்பினையுடைய பாண்டியனும் எ - று.

பாகசாதனனை நட்டவன் என உருபு மயக்கமுமாம். பிணை - புணை; ஈடு. (57)

இடுக்கண்வந் துயிர்க்கு மூற்ற மெய்தினும் வாய்மை காத்து வடுக்களைந் தொழுகு நாலா மரபினா னுரையை யாத்தன் எடுத்துரை மறைபோற் சூழ்ந்து சிறைக்களத் திட்ட யாப்பு விடுத்தனன் பகடு போல மீண்டன மேக மெல்லாம்.

இடுக்கண் வந்து உயிர்க்கும் ஊற்றம் எய்தினும் - துன்ப முண்டாகி உயிருக்கும் இடையூறு வந்தாலும், வாய்மை காத்து - மெய்ம்மையைப் பாதுகாத்து, வடுக்களைந்து ஒழுகும் - குற்றத்தையகற்றி ஒழுகும், நாலாம் மரபினான் உரையை - நான்காங் குலத்தினனாகிய அவன் கூறிய மொழியை, ஆத்தன் எடுத்து உரை மறைபோல் சூழ்ந்து - இறைவன் உயிர்களின் பொருட்டு) எடுத்துக் கூறிய மறை மொழிபோல் மதித்து, சிறைக் களத்து இட்ட யாப்பு விடுத்தனன் - சிறைச்சாலையின்கண் இட்டிருந்த தளையினை நீக்கினான்; மேகம் எல்லாம் பகடுபோல மீண்டன - முகில்கள் நான்கும் யானைகள் போல மீண்டு சென்றன எ - று.

இடுக்கண் - வறுமை முதலிய துன்பம்; உயிர்க்கும் : உம்மை எச்சமும் சிறப்புமாம். ஊற்றம் - ஊறு. வாய்மை காத்தலை ‘வழுக்கறு வாய்மை மாண்பும்’ என மேலே உரைத்ததனுள்ளுங் காண்க. வேத மொழிபோற் பொய்யாதெனக் கருதி, களவேள்வி நாட்டில் ஏழூர்களையுடைய ஒருவன் ‘நாம் முன்’ என்று கூறிப் புணை நின்றான் என நம்பி திருவிளையாடல் கூறும். (58) நன்றி : http://www.tamilvu.org/slet/l41d0/l41d0sn1.jsp?x=609