Jump to content

User:தாரணி

From Wikipedia, the free encyclopedia
          ஆபத்தில் தமிழ்!
 தமிழ்  நாட்டில்  பிறந்தேன்  என்று மகிழ்வதா? இல்லை. தூய தமிழ் பேச ஆசைப் படும் பொழுதும், அவ்வாறு பேசுகிற பொழுதும்​ அவர்களை கேலி செய்யும் மூடர்களை நினைத்து வருந்துவதா? இப்பொழுது கூட இந்த வரிகளை நீங்கள் படித்த பிறகு இதற்கு எந்த முறையில் கேலி கருத்துக்களை கொடுப்பது என்று யோசிக்க தோன்றும்... ஆனால் உண்மையை உணரும் போது, மேலே உள்ளது சாதாரண வார்த்தைகள் அல்ல,பல தமிழர்கள் மனதில் உள்ள ஆதங்கமான கேள்வி என்பது உங்களுக்கு புரியும்.பல பேர் கூறுகின்றனர் எதிரிகளை அடித்து வீழ்த்துவது வீரம் என்று.உண்மை அது அன்று.நாம் தமிழ் மொழயை எதிர்ப்பவர்களை எதிர்த்து எப்பொழுது தமிழுக்கு உயிர் கொடுக்கிறமோ, அப்போது தான் நாம் உண்மையாக வாழ்வதாக அர்த்தம்.தேவையான இடங்களில் ஆங்கில மொழி உபயோகிப்பதில் குற்றம் இல்லை.ஆனால் தமிழின் இடத்தில் ஆங்கில மொழி திணிக்க படுவதை அறிந்தும் அமைதியாக இருந்தது தான் தவறு.இப்பொழுது தமிழை பாதி அளவாக புறக்கணிக்கும் தமிழ் நாட்டின் ஆங்கில மேதைகள், காலப்போக்கில் பணத்துக்காகவும், நாட்டின் வளர்ச்சி என்று கூறியும் தமிழ் மொழயை அழிக்க கூட தயங்க மாட்டார்கள்.உலகிலேயே பயில்வதற்கு கடினமான மொழி தமிழ்.ஆனால் உலகின் பல பகுதிகளிலும் உள்ள பல்வேறு மொழியினர் நம் தமிழ் மொழயை விருப்பத்துடன் கற்று வருகின்றனர். அத்தகைய சிறப்பான நம் தமிழ் மொழயை நாம் ஆங்கிலேயரிடம் கொடுத்து (விற்று) கொண்டு இருக்கிறோம். எதிர்காலத்தில் நம் நாடு பெயரில் மட்டும் தமிழை கொண்டிருக்குமோ என்ற அச்சம் ஏற்படுகிற சூழல் இது. தமிழைக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.நம் மொழியை​பேசுவது தான் வீரம், பெருமை.இதை உணருங்கள் ,உண்மை இதுவே என்று.மற்ற மொழியினர் நம் தமிழ் மொழயை உணர்ந்து உயர்த்திப்பேசும் இதே நேரத்தில் நாம் ஆங்கிலத்தை கூறுகின்றோம். இந்த கருத்துக்களை நீங்கள் பலமுறை படித்து அலுத்து போயிப்பதாக உணரலாம் . ஆனால் நீங்கள் படித்துக்​கொண்டு மட்டும் இருக்கும் வரை, இது போன்ற வரிகள் உங்களுக்கு அலுத்து கொண்டு மட்டுமே இருக்கும்.இதை நீங்கள் பகிர வேண்டும் என்பது என் எண்ணம் இல்லை.ஒரு முறை நினைத்து பாருங்கள்... நீங்கள் கூட கண்டிப்பாக ஒரு முறையாவது எனக்குள் எழுந்தது போன்ற சில கேள்விகளை உங்களுக்குள்ளும் எழுப்பி இருப்பீர்கள்.. இதுவரை இல்லை எனில் இனி உணருவோம், நாம் வாழ்வது ஆங்கில நாட்டில் இல்லை, தமிழ் நாட்டில் என்று. ஆங்கிலேயரை வெளியேற்ற போராடிய நாம் ஆங்கிலத்தை மட்டும் வைத்துக் கொண்டது ஏன்? காரணம் பணம். பணம் பத்தும் செய்யுமல்லவா? ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற நாம் ஆங்கிலத்திடம் இருந்து இன்னும் சுதந்திரம் பெறவில்லை...
              -உங்கள் தோழி.