Jump to content

User:திரைஞானம்

From Wikipedia, the free encyclopedia
 தமிழ் சினிமாவில் நாவல்கள் 

தமிழ் சினிமா முழுமையாக தமிழ் பேச தொடங்கும் முன்னரே ,தமிழின் முதல் நாவல் படமாக்கும் முயற்சி தொடங்கிவிட்டது.

     வடூவூர் துரைசாமி அய்யங்கார் எழுதியா "மேனகா "என்ற நாவல் அதே பெயரில் படமாக்கப்பட்டது. திருப்பூர் சண்முககனந்த டாக்கீஸ் என்ற படநிறுவனம் தயாரித்த படம் மேனகா . சண்முகானந்த சபா நாடக குழுவை சேர்ந்த சண்முகம் அண்ணாச்சி மற்றும் அவர் நாடக குகுழுவை மொத்தகுத்தகைக்கு பேசி, படபிடப்புக்கு மும்பை(பம்பாய்) அழைத்து சென்றனர். முழு படமும் அங்குள்ள ஸ்டுடியோவில் படமாக்கபட்டது.
      ராஜா சாண்டோ இயக்குநர். சண்முகம் அண்ணாச்சி டி கே பகவதி டி கே முத்துசாமி என்.எஸ் கிருஷ்ணன் டி ஏ மதுரம்  போன்றோர் நடித்திருந்தனர்.

பாரதியாரின் கொள்கை விளக்க பாடல் இணைக்கபட்டது. சுதந்திர உணர்வை பட்டும் படாமல் காட்டிக்கொண்டனர். 32பாடல்கள் இடம்பெற்றன. தமிழின் முதல் சமூகபடம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. படம் வெற்றி. 1935ல் வெளியானது முதல் படம் வெற்றியை தொடர்ந்து அடுத்த படம் தொடங்கப்பட்டது.