Jump to content

User:மாலன்

From Wikipedia, the free encyclopedia

நாற்பதாண்டுகளுக்கு மேலாக எழுதிவரும் எழுத்தாளன். தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதுகிறேன். 13 நூல்கள் வெளியாகி உள்ளன. என் சிறுகதைகள் ஆங்கிலத்திலும் பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு முன்னணி இதழ்களில் வெளியாகி உள்ளன.

முப்பதாண்டுகளுக்கு மேல் பத்திரிகையாளனாகச் செயல்பட்டு வருகிறேன். தமிழின் முன்னணி இதழ்களான இந்தியா டுடே(தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், ஆகிய இதழ்களிலும் சன் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவிலும் ஆசிரியராகக் கடமையாற்றிய நான் இப்போது புதிய தலைமுறை, புதிய தலைமுறை கல்வி ஆகியவற்றின் ஆசிரியராகப் பணியாற்றுகிறேன்.

மைக்ரோசாஃப்ட்டின் எம்.எஸ்.ஆபீஸ் பொதி தமிழ்ப்படுத்தப்பட்டபோது அதற்குப் பங்களித்துள்ளேன்.http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE

தமிழ்க் கணிமை, தமிழ் இலக்கியம், இதழியல், வரலாறு ஆகியவை என் ஆர்வம் செலுத்தும் துறைகள்.

என் இணைய தளம்: http://www.maalan.co.in