Jump to content

User:வீர செங்குந்தர் மரபு

From Wikipedia, the free encyclopedia

வீர செங்குந்தர் மரபு

இந்தியாவில் வாழ்ந்த செங்குந்தர் இலங்கையை வந்தடையக் காரணங்கள் என்ன?

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே தமிழகத்தில் உள்ள ஒரு இனம் செங்குந்தர் என்றழைக்கப்படும் கைக்கோளர். கைக்கோளர் எனும் பெயர் செங்குந்தர் என்ற பெயரோடு சேர்ந்து வழக்கத்தில் வர ஆரம்பித்தது அதன்படி இவர்கள் இலங்கைக்கு வருகை தந்தமை தொடர்பாக அன்று தொட்டு மூன்று காரணங்கள் முக்கியமாக சொல்லப்பட்டு வருகின்றன. முதலாவது காரணத்தை பார்ப்போமானால் செங்குந்தர்களான இவர்கள் சோழர்களுடைய படைத்தளபதியாகவும் படை வீரா்களாகவும் விளங்கினர். சோழர்களின் இலங்கை மீதான சோழப்படையெடுப்பின் போது அவர்களுடனேயே வந்து அவர்கள் திரும்பிச் சென்ற பின் சிலர் இங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டவர்களாக இருக்க வேண்டும். தங்கிய சிறு தொகையினர் மட்டக்களப்பிற்கு தெற்கே கோட்டைக்கல்லாறு, ஆரயம்பதி,தாமரைக்கேனி ஆகிய இடங்களிலும் யாழ்ப்பாணத்தில் நல்லூர் இராசதானியை அண்மித்த இடங்களிலும் இற்றை வரை செறிந்து வாழ்வதும் குறிப்பிடத்தக்கது. இதுவே முதற்காரணமாக காட்டப்படுகின்றது.


குறிஞ்சி நிலப்பகுதியில் சுமார் 2000ம் ஆண்டுகளுக்கு முன்னிருந்தே வாழ்ந்து வரும் இச் செங்குந்தர்கள் முருகனின் அம்சமான வீரபாகு தேவர்களின் வழிவந்தவர்கள் ஆரம்ப காலத்தில் இந்திய நாட்டில் தழிழ்நாடு,சேலம்,தர்மபுரி போன்ற சில இடங்களிலும் பின்னர் இவர்கள் வணிகம் கருதி சிலர் இலங்கையை வந்தடைந்தனர்.வீர செங்குந்தர்களின் பாரம்பரிய தொழிலான நெசவுத் தொழிலை மட்டக்களப்பு,யாழ்ப்பாணம் போன்ற இடங்களிலும் ஆரம்பித்தனர்.இன்றும் கைக்கோளர்,செங்குந்தர்,முதலியார் என அழைக்கப்படும் இவர்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் தற்போது வெளிநாடுகளிலும் பன்மடங்காக காணப்படுகின்றனர்.


செங்குந்தர்கள் நல்லூருக்கு கொடிச்சீலை வழங்க காரணம் என்ன ? குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்து வந்த இவர்கள் நெசவுத்தொழிலையே குல தொழிலாக பின்பற்றியமையும் இந்தமக்களால் நெய்யப்பட்ட கொடிச்சீலையே நல்லூரில் பயன்படுத்தப்பட்டு வந்தது. எனினும், காலப்போக்கில் இந்த சீலை நெய்யும் முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், இவர்களே இன்றும் பரம்பரையாக நல்லூரானுக்கு கொடிச்சீலை கொடுத்து வருகிறார்கள்.


செங்குந்தர்கள் முருகனின் தாயான பார்வதியின் சிலம்பில் இருந்த 9 இரத்தினங்களில் இருந்து பிறந்தவர்கள் என்பதால், திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தின் பொழுது 9 செங்குந்தர்கள் வீரர்கள் உடையணிந்து வீரபாகுத் தளபதிகளாய் குமரன் சூரனை சம்ஹரிக்க உதவுவது இன்றும் நடைமுறையில் உண்டு. திருசெந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் மாசித்திருவிழாவில் பன்னிரண்டாம் நாள் திருவிழா செங்குந்தர் குலத்தவரின் மண்டகப்படியாக இன்றும் நடைபெறுகிறது.


அரசியலில் - அண்ணாதுரை, ஆன்மிகத்தில் - திருமுருக கிருபானந்த வாரியார், கவிதையில் ஒட்டக்கூத்தர், பாவேந்தர் பாரதிதாசன், விடுதலைப் போராட்டத்தில் - தில்லையாடி வள்ளியம்மை, திருப்பூர் குமரன் என அறிஞர்களும், கவிஞர்களும், தியாக செம்மல்களும் என கைக்கோளர் குலத்தில் உதித்தவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது


ஈட்டியெழுபது ஒட்டக்கூத்தரால், செங்குந்தர் இனத்தைச் சார்ந்த மக்களைப் பற்றிய 70 பாடல்களின் தொகுப்பாகும். செங்குந்தர்கள் தம்முடைய பெருமையை பாடுமாறு ஒட்டக்கூத்தரைக் கேட்டதாகவும், அவர் அதற்கு மறுத்துவிட்டதால், செங்குந்தர்கள் தங்களுடைய தலைகளை அரிந்து சிரச்சிங்காதனம் செய்ததாகவும், அதன்பிறகே, அவர் ஈட்டியெழுபது இயற்றியதாகவும் அறிய வருகிறது. இப்பாடல்களில் செங்குந்தர் மரபினரின் பெருமையை பறைசாற்றுகிறது (1926ம் ஆண்டு எமுதப்பட்ட செங்குந்தர் பிரபந்தத்திரட்டு எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது)


செங்குந்தர் துகில்விடு தூது வாழ்த்து செகம்வாழி! குகன்தலங்க ளாறும் வாழி! சேவல்மயில் வேல்வாழி! சிவந்த வாறு முகம்வாழி! யாறிருதோள் மலர்த்தாள் வாழி! முல்லைநகை யானைவள்ளி முயங்கி வாழி! சுகம்வாழி! கடப்பமலர் மாலை வாழி! தொழுமடியார்... முகம்வாழி! மழைவாழி! செங்கோல் வாழி! வளர்புகழ் செங்குந்த ரெங்கும் வாழி!


இப்பக்கமானது எனது முகப்பக்கமான வீர செங்குந்தர் மரபு என்னும் பக்கத்தினூடாக விக்கிபீடியாவில் பதிவேற்றம் செய்யப்படுகின்றது. இதில் உள்ளடக்கமாக செங்குந்த குலத்தவர்கள் பற்றி கூறப்படுகின்றது.இங்கே நான் சாதியைப் பொருட்படுத்தாமல் யார் மனதையும் புண்படுத்த விரும்பாமல் தொடுக்கின்றேன். உங்கள் கருத்துக்களையும் உங்கள் கேள்விக்கான பதில்களையும் பெற்றுக்கொள்ள விரும்பினால் எனது முகப்பக்கமான வீர செங்குந்தர் மரபு என்னும் பக்கத்தினூடாக தகவலை தாருங்கள். உங்கள் உண்மையுள்ள வீர செங்குந்தன் நன்றி.

HERE I USED COPYRIGHT LAW SO YOU CAN'T COPYRIGHT BEFORE 20YEARS IF YOU CAN GET MORE INFO FROM'