Jump to content

User:ARAVI KATHIR

From Wikipedia, the free encyclopedia

தென்னவநல்லூர்:

இந்த கிராமம் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா தழூதாலைமேடு அஞ்சல் இல் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 200 குடும்பங்கள் உள்ளன,இங்கு பல்வேறு சமுதாய மக்களும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். இங்கு சீமை நாட்டார் பரம்பரை தான் இரணூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வந்து காடுகளை அழித்து கிராமத்தை உருவாக்கினார்கள்.

இந்த கிராமத்தில மூன்றுக்கு மேல் கோயில் உள்ளது.நடுத்தெரு, முடுக்கு தெரு, கீழ தெரு, தெற்கு தெரு ஆகிய தெருக்கள் உள்ளன, இரண்டு குளம் உள்ளது, ஒரு காலத்தில் இங்கு தான் நல்ல தண்ணீர் குளம் இருந்தது.

இங்கு உள்ள மக்கள் விவசாயம், மாடு மேய்ப்பது, கூலி வேலை செய்வது மற்றும் மணல் லாரி தொழில் செய்து வருகின்றனர். இதற்கு ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌அருகில் அணைக்கரை, குழவடையான், கண்டியஙகொள்ளை, கஞ்சங்கொள்ளை ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன.

இங்கு பல மணல் லாரி நிறுவனங்கள் உள்ளன அவை

ராஜாமணி அம்மாள் லாரி சர்வீஸ், முருகன் லாரி சர்வீஸ், திருமுருகன் லாரி சர்வீஸ், எம் எஸ் ஆர் லாரி சர்வீஸ், வேம்பு அய்யனார் லாரி சர்வீஸ், அய்யனார் லாரி சர்வீஸ் , ஆர் ஆர் என் லாரி சர்வீஸ், ஏ ஜி ஆர் லாரி சர்வீஸ், வேல்முருகன் லாரி சர்வீஸ் போன்று பல நிறுவனங்கள் உள்ளன.

இங்கு உள்ள மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் சித்திரை மாதத்தில் பால் குடம், காவடி எடுப்பது வழக்கமாக உள்ளது.