Jump to content

User:Ajgswiss

From Wikipedia, the free encyclopedia

எகிறும் ஜனத்தொகையை எப்படித் தாங்கும் இந்தப் பூமி ?

“ஒவ்வொரு 102ஆண்களுக்கும் 100 பெண்கள் இருப்பார்கள். இப்படியே போனால் ஒருவனுக்கு ஒருத்தி என்பதைக் கைவிட்டுவிட்டு , ஒருத்திக்கு இருவர் என்ற நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை”

உலகின் ஏழு கண்டங்களில் , ஆறு கண்டங்கள் நிரந்தரமாக பெரும் தொகை மக்களுடன் திணறிக் கொண்டிருக்கின்றன. இதில் முன்னுக்கு நிற்பது ஆசியக் கண்டம் . அதனுடைய 4.3 மில்லியன் குடி மக்கள் , உலக ஜனத் தொகையின் 60 வீதமாக திகழ்கின்றார்கள் , உலகின் சனச்செறிவு அதிகம் கொண்ட சீனாவிலும் , இந்தியாவிலும் மாத்திரம் வாழ்பவர்கள் , உலக ஜனத் தொகையின் 37வீதத்தை நிறைவு செய்கிறார்கள் இருண்ட கண்டம் என்று கூறப்பட்டாலும் , இங்கு குய்யோ மாயோ என்று பிள்ளைகள் குறுக்கு நெடுக்காக ஓடித் திரிகிற கண்டம் இது. பல நோய்கள் , பஞ்சம் பட்டினி , உள்நாட்டுப்போர் என்று பல காரணிகளால் இலட்சம் இலட்சமாக பலர் பலி எடுக்கப்பட்டாலும் , உலக ஜனத்தொகையின் 15வீதம் இங்குதான் இருக்கின்றது . இங்குள்ள இன்றைய ஜனத்தொகையை ஒரு பில்லியனாகக் கணித்துள்ளர்கள். குறைந்து கூடும் ஒரு சொற்ப ஜனத் தொகையுடன் காணப்படுவதுதான் அன்டாக்டிக்கா . இங்கு ஆய்வு கூடங்களை அமைத்து , உலகின் காலநிலை தொடக்கம் வெவ்வேறு விடயங்களை விஞ்ஞானரீதியாக ஆராய பன்னாட்டவர்களும் இங்கு வந்து முகாமிட்டு தங்கள் பணியை முடித்து விட்டு போய்விடுகின்றார்கள் . எனவே காலத்துக்கு காலம் மாறும் ஜனத்தொகை என்பதோடு , இது நிரந்தர வாழ்வுக்கு உகந்த பிரதேசமும் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது .

8 பில்லியன் .......இது 2023இல் பூமியின் ஜனத்தொகையாக இருக்கப் போகின்றது என்கிறது ஐநா ! இந்தக் காலகட்டத்தில் ஆண்கள்தான் பெண்களை விட அதிகமாகக் காணப்படுவார்கள் என்றும் கூறும் இவர்களது புள்ளி விபரங்கள் , அடுத்த வருடம் 60வயதுக்கு மேற்பட்டவர்கள் தொகை , முதற் தடவையாக ஒரு பில்லியன் என்ற இலக்கைத் தொடப்போவதாகவும் கூறி இருக்கின்றது . ஆண்டாண்டு உலக ஜனத்தொகை சம்பந்தமாக ஐ நா விடுக்கும் வருடாந்த அறிக்கையில்தான் இந்தப் புள்ளி விபரங்கள் காணப்படுகின்றன . ஐரோப்பிய நாடுகளை விட ஆபிரிக்க ஆசிய நாடுகளில்தான் ஜனத்தொகை கிடுகிடு வளர்ச்சியைக் கண்டுவருகின்றது என்பது உங்கள் எல்லோருக்குமே நன்றாகத் தெரிந்த விடயந்தான் ,

இப்போதைய ஐநா தகவலின்படி தென் சஹாரா , ஆபிரிக்கா பகுதிகளில்தான் ,2050க்குள் காணும் வளர்ச்சியின் பாதித் தொகை இருக்கும் என்கிறார்கள் . ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது , கருவுறுதல் விகிதம் இப் பிராந்தியங்களில்தான் அதிகமாக இருக்கும் என்றும் சொல்லபப்டுகின்றது. 

அப்படியானால் அந்த நாடுகள் எவையென்று அறியும் ஆர்வம் நமக்குள் தலைதூக்குகின்றது அல்லவா ? குறிப்பாக 10நாடுகளின் பெயர்கள் வெளிக்கிளம்புகின்றன. உலக ஜனத்தொகை வளர்ச்சியின் பாதித் தொகைக்கு இந்த நாடுகளே காரணமாகப் போகின்றன . முன்னிற்கின்றன இந்தியா, சீனா  ! அதைத் தொடரும் நாடுகளாக நைஜீரியா , கொங்கோ குடியரசு ஆகிய ஆபிரிக்க நாடுகள் வருகின்றன . இதையடுத்து பாகிஸ்தான் . மீண்டும் தலைதூக்குவது ஆபிரிக்க நாடுகளான எத்தியோபியா, தன்சானியா . இவர்களை அடுத்து வருவது அமெரிக்கா . அமெரிக்காவுக்கு இன்னொரு ஆபிரிக்க நாடான உகண்டா. உகண்டாவைத் தொடர்வது இந்தோனேசியா! இந்த 10 நாடுகளில் 5 நாடுகள் ஆபிரிக்க நாடுகள் என்று அறிய வரும்போது , எந்தக் கண்டத்தில் ஜனத்தொகை கிடுகிடு வளர்ச்சியைக் காணப்போகின்றது என்பது நமக்கு நன்றாகவே புரிந்திருக்கும். 2050ம் ஆண்டளவில் , ஜனத்தொகை அதிகம் கொண்ட 20 உலக நாடுகளில் 7 நாடுகள் ஆபிரிக்க நாடுகளாக இருக்கும் என்பது இவர்கள் ஆருடமாக இருக்கின்றது

கிழக்கு ஐரோப்பிய நாடுகள் இந்த ஜனத்தொகை விடயத்தில் நன்றாகவே பாதிக்கப்பட்டுள்ளதை நீங்கள் அவதானிக்கக் கூடும். பல்கேரியா, குரேசியா , லற்றிவியா, லித்துவேனியா. போலந்து , மொல்டோவா குடியரசு , ரோமானியா, செர்பியா , உக்ரைன் ,லித்துவேனியா , போலந்து, மொல்டோவா குடியரசு , ரோமானியா , செர்பியா , யுக்ரெயின். ஆகிய நாடுகளின் ஜனத்தொகை 15வீத வீழ்ச்சி காணப்போகின்றது என்பது இவர்களது இன்னொரு கணிப்பு. இன்னொரு சுவாரஸ்ஸியமான கணிப்பையும் இவர்கள் பகிர்ந்து கொள்கின்றார்கள். ஒவ்வொரு 102ஆண்களுக்கும் 100 பெண்கள் இருப்பார்கள் என்பதுதான் அது . இப்படியே போனால் ஒருவனுக்கு ஒருத்தி என்பதைக் கைவிட்டுவிட்டு , ஒருத்திக்கு ஒருவர் என்ற நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை,. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொகை 2018இல் ஒரு பில்லியனாக இருக்கும் . அதுவே 2 பில்லியனாக 2050 இல் அதிகரிக்கும் என்பது இவர்கள் சேகரித்த சில புள்ளி விபரங்கள் . 2050 இன் ஜனத்தொகையில் 15 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் தொகை , முழு ஜனத்தொகையின் காற்பங்காக இருக்கும் என்பது , நம்மை ஆச்சரியப்படுத்தும் இன்னொரு புள்ளி விபரம் !

உலகின் மிகக்குறைந்த அபிவிருத்தியைக் கண்டுள்ள நாடுகளில் , பெண்களின் கருவுறுதல் விகிதம் பொதுவாகவே அதிகம்தான். ஒரு பெண்ணுக்கு 4.3பிள்ளைகள் என்று கணிக்கிறார்கள் 2050 இல் இங்கு ஜனத்தொகை சுமாராக 2 பில்லியனாக அதிகரிக்கும் என்கிறார்கள் கல்வியறிவு குறைவு என்பதால் திட்டமிடல் இங்கு குறைவு . குறைந்த பிள்ளைகள் இருந்தால் நிறைந்த வாழ்வு கிடைக்கும் என்று வழி காட்டுபவர்கள் இருப்பதில்லை . ஒரு பெண் என்றால் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டு , சமைத்துக் கொட்டிக் கொண்டு , வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருக்க வேண்டியவள் என்று முத்திரை குத்தி விடுவதால் ,வீடில் பல சுமைகளோடு நிதிச் சுமையும் இவர்கள் தோளில் ஏறி உட்கார்ந்து கொள்கின்றது . ஜனத்தொகை அடிப்படையில் ,இப்பொழுது 7ம் இடத்திலுள்ள நைஜீரியா , 2050இல் இன்று 3ம் இடத்தில் நிற்கும் அமெரிக்காவை ஓரம்கட்டிவிட்டு , அந்த இடத்தைப் பிடித்துவிடும் என்கிறது ஐநாவின் இன்னொரு புள்ளி விபரம் ! இன்றைய போக்கு தொடருமானால் , அடுத்த நான்கு வருடங்களுள் , சீன ஜனத்தொகை , 1.4பில்லியனாக உயரும் . அதன்பின்னர் வீழ்ச்சி காண ஆரம்பிக்கும் என்கிறார் அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் , மக்கள் ஜனத்தொகை பற்றி ஆய்வு செய்யும் சீனப் பேராசிரியர் வங் என்பவர் ! இன்று சீனாதான் உலகின் அதிக ஜனத்தொகை கொண்ட நாடாக இருந்தாலும் 2025 இல் , இந்தியாவே முதல் இடத்தில் நிற்கும் என்கிறார் ஒரு இந்தியப் பேராசிரியர் .”குடும்பத்துக்கு ஒன்று” என்ற தீவிரமான போக்கை70 களில் கடைப்பிடித்த சீனா , 2015இல்தான் இந்தப் போக்கை கைவிட்டு , இரண்டாவது பிள்ளை பெற்றுக்கொள்ள பச்சைக்கொடி காட்டியது

1947 இல் இந்தியா சுதந்திரமடைத்த காலத்திலிருந்து, தற்பொழுது உள்ள 1.3 பில்லியன் ஜனத் தொகையைப் பார்த்தால், ஜனத்தொகை இங்கு நான்கு மடங்கு அதிகரித்திருப்பது புலனாகும் .2011 வரை 17.7 வீத ஜனத்தொகை அதிகரிப்பைக் கண்டிருந்த இந்தியா , 2050 இல் 1.7 பில்லியன் தொகையை எட்டிப் பிடித்து பின்பு இத் தொகை மெல்லச் சரிய ஆரம்பிக்கும் என்கிறது ஐநா !

ஜனத்தொகையைப் பொறுத்தமட்டில் ஜப்பான் ஒரு தர்மசங்கடமான நிலையில் இருக்கின்றது . இங்கு ஜனத்தொகை வேகமாக அருகி வருவதே இதற்கான காரணம் ! 2010க்கும் 2015க்கும் இடையில் 947,345 பேரை ( சண் பிரான்சிஸ்கோ நகரின் ஜனத்தொகையை விட அதிகமான தொகை இது ) ஜப்பான் இழந்துள்ளது என்பது நம்மை வியக்க வைக்கும் தகவல் ! ஆண்டுக்கு ஆண்டு இந்த வீழ்ச்சி தொடரும் என்கிறார்கள் . இதைச் சுருங்கச்சொன்னால் ஜப்பானுக்கு “ கிழடு தட்டிக்கொண்டு” போகிறது என்று சொல்லி விடலாம் .பிந்திய வயதுத் திருமணம் நாட்டில் மிகக் குறைந்த குழந்தைகளுக்கே இடமளிக்கின்றது. 2100ம் ஆண்டளவில் ஜப்பானின் ஜனத் தொகை 83 மில்லியனாக சுருங்கப் போகின்றது என்றும் , அதில் 35 வீதமானவர்கள் 65 வயதைத் தாண்டியவர்களாக இருப்பார்கள் என்பதும் “இனிந்துவக்கும்” ஒரு விவகாரமல்ல !

2012 இல் சராசரி பிறப்பு விகிதம் 1.4 ஆக இருந்து , இப்பொழுது 1.8 ஆக உயர்ந்திருந்தாலும் , இதை ஒரு பெண்ணுக்கு சராசரி 2.1 பிறப்பு விகிதமாக உயர்த்தி , ஜனத்தொகையை 100 மில்லியனாக உயர்த்துவது என்பது இலேசுப்பட்ட விடயமல்ல என்று பெருமூச்சு விடுகிறார் ஒரு அதிகாரி ! பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக , போதிய பிள்ளைகள் நாட்டில் இல்லையே என்று அவதியுறும் ஜப்பானுக்கு , இதன் எதிரொலியாக , வேலைசெய்ய போதிய ஆட்கள் இல்லாத தாக்கம் வந்து சேர்ந்துள்ளது . 2030இல் தொழிலாளர் தொகை 7.9 மில்லியனால் வீழ்ச்சி கண்டு 55.61 மில்லியனாக மாறப்போகின்றது . 128 மில்லியனாக இருக்கும் ஜப்பானின் இன்றைய ஜனத் தொகை 2060இல் 86 மில்லியனாக வீழ்ச்சி காண்பதும்;, இதில் 40 வீதமானவர்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை ஆட்டம்காண வைப்பவை ,.வெளிநாட்டவர்கள். விடயத்தில் , தன் கதவை இறுகச் சாத்திக் கொண்டிருக்கும் ஜப்பான் இனி என்ன செய்யப்போகின்றது ?

2050இல் நம்மில் பலர் இந்தப் பூமியில் இருக்கப்போவதில்லை. நாமே இல்லை பிறகெதற்கு இந்த ஆய்வு என்று உங்களில் சிலர் கேட்கக் கூடும் . அப்பா ஆசையாய் வளர்த்து இன்று நெடுத்தோங்கி வளர்ந்து நிற்கும் தென்னை மரம்தானே இன்று நமக்கு தேங்காய் தருகின்றது ?அப்பாவிற்கு பயன்படாதது, பல வருடங்கள் கழித்து , இன்று பிள்ளைக்கு பயன்படவில்லையா ? எதற்கும் ஒரு தொலைநோக்குப் பார்வை வேண்டும் . அவளவுதான் சொல்ல முடியும் ! -ஏஜேஜி- 07.11.2017