Jump to content

User:Arunji2010/sandbox

From Wikipedia, the free encyclopedia
St. Simeon's Church, Koviloothu

இந்த ஆலயத்தை மகிமையால் நிறையப்பண்ணுவேன் .

     நெல்லை நாட்டின் மேற்கு பகுதியிலிருக்கும் கோவிலூற்று என்னும் கிராமத்தை சுற்றிலுமிருந்த பெரிதும் சிறிதுமான பல ஊர்களில் கிறிஸ்து நாதரின் நற்செய்தி நல்லூர் மிஷினரிமர்கலலும் உபதேசியாராலும் பிரசிங்கிகபட்டதின் பயனாக, சிறுசிறு கிறிஸ்தவ சபைகள் தோன்றியதேனினும், கோவிலூற்று வாசிகள் மட்டும் பல ஆண்டுகளாக சத்தியத்தை எதிர்த்து நின்றனர். ஆயினும் 'கோட்டை விழும் காலமும்' சமிபித்தது. நல்லுரின் முதல் மிஷினரியும் பிரசித்தி மிகப் பெற்றவருமான P . P . ஷாப்வ்ற்றர் ஐயரும் ஊழியரும் அவ்வூரில் செய்து நிறைவேற்றிய தீவிர சுவிசேஷ பிரச்சாரம் 1847,48 ல் பலன் தர வாரம்பித்தது. அடுத்த ஆண்டுக்குள் அங்கு ஒரு சிறு சபை தோன்றிவிட்டது. அச்சபையின் பிரமுகர்களிலொருவரும் சபைத் தலைவருமாயிருந்தவர் மனுவேல் நாடார் என்று மிஷினரி ரிக்கார்டுகளில் குறிக்கப்பட்டுள்ளார். இவரைப்பற்றி நாம் அறியக்கூடியவை, அவர் ஒரு தனவந்தர் என்பதும், செல்வாக்கு மிக்கவர்ரென்பதும், தன்னை மீட்டுக்கொண்ட இரட்சபெருமான் மீது எல்லையற்ற பக்தியும் அன்புமுடையவரென்பதுமாகும். கோவிலூற்று முழுவதும் இயேசுவுக்குச் சொந்தமாக வேண்டுமென்ற தீராத வாஞ்சைமிக்கோராகித், தான் அறிந்த நற்செய்தியை ஓயாது எடுத்துக் கூறுவதன் மூலமாயும் தம் உறவினர் பலரை அவர் சபையிற் சேர்க்கக்கூடியவராக இருந்தார் . சபை சிறுகச்சிறுக வளர்ந்தது. ஒரு ஜெபாலயமும் கட்டப்பட்டது.
    1850 - ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15- ம் நாள், நல்லூர் உதவி மிஷினரியான ஸெப்ற்றிமஸ் ஹாப்ஸ் ஐயர் (Rev . Septimus Hobbs ) அந்த ஜெபாலயத்தைப் பிரதிஷ்டை செய்யச் சென்றார். அன்று விடிந்ததிலெருந்து விடா மழை; குதிரையின் மீதமர்ந்து சென்ற அவர் தெப்பமாய் நனைந்துவிட்டார். சேற்றிலும் சகதியிலும் மிகுந்த சிரமத்துடன் பிரயாணம் செய்து கோவிலூற்றை யடைந்தார். குறிக்கப்பட்ட நேரத்துக்குமேல் வெகு நேரமாயிற்று. பிரதிஷ்டைக்கு வந்த சபையார் வீடுகளுக்குச் சென்றிருப்பாரோ வென்று பயந்து கொண்டே வந்த ஹாப்ஸ் ஐயருக்குச் சபையாரனைவரும் கொட்டும் மழையிலும் அச்சிற்றாலயத்தில் காத்திருந்ததைக் கண்டதும் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கோ அளவில்லை. பிரதிஷ்டை முடிந்தது; அப்பொழுது மணி இரவு ஒன்பது.
St. Simeon's Church Side View
St. Simeon's Church Side View
     அத்தகைய ஆர்வமுள்ள மக்களைக் கொண்ட சபை தன் வருங்காலத்தைப்  பற்றி மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்ததில் ஆச்சரியமில்லை. மனுவேல் நாடாரின் முயற்சியினால் அதிலும் அவரது செல்வாகினிமித்தம், மேலும் சிலர் கிறிஸ்து சபையிற் சேர்ந்தார்கள் (1855). அதில்தான் குறையிருந்தது. தனவந்தரும் சொற்சக்திமிக்கோருமான அவருக்கு பயந்தும், அல்லது அவரை நயந்துகொள்ள விளைந்துமே இம்மக்கள் சபையிற் சேர்ந்தனரேயன்றி கிறிஸ்துநாதரால் கவரப்பட்டல்ல . மேலும், ஷாப்வ்ற்றார் ஐயர் மாற்றப்பட்டு, அவருக்குப் பின்வந்த கிளார்க் (Rev . W . Clark ) ஐயரால் அப்புதுக் கிறிஸ்தவர்களுக்கு நற்போதனை கொடுக்கத்தக்க திறமையுள்ள உபதேசிமாரை அச்சபைக்கு நியமிக்கக் கூடாதுபோயிற்று. நியமிக்கப்பட்ட உபதேசிமாரும் மனுவேல் நாடாருக்கு பயந்து பயந்துதான் கடமையாற்ற வேண்டியதிருந்தது.
     இதற்கிடையில், கோவிலூற்றில் பெரிதும், உறுதியும் அழகும் நிறைந்தவோர் ஆலயத்தைக் கட்ட வேண்டுமென்று மனுவேல் நாடார் தீர்மானித்தார். கிளார்க் ஐயரும் சம்மதம் கொடுத்தார் ரூ . 4500 - க்கு எஸ்ற்றிமேட் தயாரானது. செங்கல்லும் சுண்ணாம்பும் கொண்டு 50 அடி நீளமும் 30 அடி அகலமுள்ள கட்டடமாக அது கட்டப்படவெண்டுமென்று தீர்மானமானது. முன் மண்டபமும் கிரதியரறையும் வேறு. ஆலயத்தைச் சுற்றிச் செங்கல் - சுண்ணாம்பு மதில். சபையார் ரூ . 60 கொடுக்கச் சம்மதித்தனர் . மீதி ரூ . 4440 -ம் வசூலித்து கொள்ள தீர்மானம் ! 1856 ஜூலை 16 - ல் தியதி நல்லூர் கிளார்க் ஐயர் இப்பெரிய ஆலயத்திற்கு அஸ்திவாரமமைத்தார். மனுவேல் நாடார் தலைமையில் கட்டுமான வேலை துரிதமாக நடந்தேறியது. மக்கள் மகிழ்ச்சியுடனிருந்தனர். ஆனால், 1957 - ம் ஆண்டு மனுவேல் நாடார் திடீரென்று மரணமடைந்தார். அது ஒரு பெரிய அதிர்ச்சி. அதிலும், அவருக்காகக் கிறிஸ்து சபையிற் சேர்ந்த புதுக் கிறிஸ்தவர்களுக்கு ஒரு பேரதிர்ச்சியாக முடிந்தது. அவர்களுடைய 'அஸ்திபாரங்கனைத்தும் நிர்மூலமாயின!'. தம்மை உண்மையாய் சேவித்துத் தமக்காக பக்தி வைராக்கியம் காண்பித்த மனுவேல் நாடாரை கிறிஸ்தவர்களின் கடவுள் காத்துக்கொள்ளவில்லையென்று தெய்வத்தின் மீதுள்ள நம்பிக்கை தளர்ச்சியடைய இடங்கொடுத்துவிட்டார்கள்.
    கிறிஸ்தவர்களையும், குறிப்பாக மனுவேல் நாடாரையும் அவர் மூலமாகத் திருச்சபையிற் சேர்ந்த புதுக்கிறிஸ்தவர்களையும் பகைத்த விரோதிகள் அவர்களுக்கு விரோதமாய் எழும்பினர். கிறிஸ்தவர்களைப் பாதுகாக்க இப்பொழுது மனுவேல் நாடாரில்லை. அப்பகைஞர் பற்பல விதமாக அவர்களைத் துன்புறுத்தி, அவர்களில் 35 பேர் மீது, வீடுகளை திறந்து கொள்ளையடித்ததாகப் பொய்க் குற்றம் சாட்டினர். முப்பத்தைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டனர். சிறையிலும் அவர்கள் கொடூரமாக நடத்தப்பட்டார்கள். வழக்கு வெகுநாள் நடந்தது. அது முடிவதற்குள் புதுக்கிறிஸ்தவர்களும் பழைய சபையினரிற் சிலரும் மறுதலித்துவிட்டனர்! வழக்கு பொய்யானது என்று ரூபகாரமாயிற்றெனினும், அந்த முப்பத்தைவரிலும் அநேகர் தங்கள் பழைய மதத்துக்கே திருப்பிப்போயினர்! (Jl . 1857 Nov . 13 - W Clark ). அதன் பின் துன்பம் ஓய்ந்தது. ஆலயக் கட்டுமானமோ நின்று விட்டது.
    இனி நல்லூர் சேகரத்தின் மேற்கு, தென்மேற்கு பகுதிகளில் சரியான முறையில் கண்காணிப்புச் செய்யாவிடில் மற்ற சபைகளும் பாதிக்கப்படும் என்றுணர்ந்த கிளார்க் ஐயர், புலவனூரை ஒரு குருபீடமாக்கி, D . ஞானமுத்து ஐயரை அங்கு குடியிருந்து கொண்டு சபைகளைக் கவனித்து வரும்படி ஏற்பாடு செய்தார் (1858). ஞானமுத்து ஐயர் வெகு திறமைசாலி. திருநெல்வேலி, மக்களில் குரு பட்டம் பெற்றவர்களில் முதலாவதானவர் (1847). அவருடைய ஓயா உழைப்பினாலும், திறமையான மேற்பார்வையினாலும் புலவனூர் வட்டாரச் சபைகள் தீவிர வளர்ச்சியடைந்தன. கோயிலூற்று சபையிலும் ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவர்கள் தொகை 52 ஆக உயர்ந்தது (1861 டிசம்பர் ).
     புலவனூர் சேகர வளர்ச்சியைக் கண்ட பகைவர் மறுபடியும் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தத் தொடங்கினர். மேட்டூர், ஆவுடையநாடானூர், புலவனூர், கலியாணிபுரம், பாவூர், புளியரை, கோவிலூற்று என்னும் சபைகளுக்கு அது ஒரு பயங்கர சோதனைக் காலம் (1862 ஏப்ரல் - ஜூன் ).
     அக்காலத்தில், வசந்தராயர் என்றொரு இந்து வீரன் தோன்றி பிரிட்டிஷ் ஆதிக்கத்தை அழித்துக், கிறிஸ்து மார்க்கத்தை இந்தியாவிலிருந்து அகற்றிவிடுவார் என்ற ஒரு வதந்தி நாடெங்கும் பரவினது. அத்துடன் முத்துக்குட்டி என்பவர் ஆரம்பித்த நாராயணசாமி வணக்கமும் மிகுந்த செல்வாக்குடன் பரவிக் கிறிஸ்தவர்களிலும் அநேகரை இழுத்துக் கொண்டது. மேலும், கொடிய காலரா வேறு தோன்றிவிட்டது. காலரா தோன்றியதற்குக் காரணம் மக்களிற் பலர் கிறிஸ்தவர்களானதினிமித்தம் சாமிகளும், அம்மன்களும் கோபித்துக்கொண்டு, விஷ பேதியை அனுப்பிவிட்டன வென்று மக்கள் நம்பினார்கள் . எனவே, மறுபடியும் கிறிஸ்தவர்களுக்குக் கொடிய துன்பமுண்டாயிற்று. (1862- செப்டம்பர் - டிசம்பர் ) கோவிலூற்று, புலவனூர், புளியரை,பாவூர் முதலிய சபைகளில் அநேகர் மறுதலித்துவிட்டனர்.
    சிறுத்துப்போன கோவிலூற்று சபையில் தூண்களாய் நின்றவர்கள் மனுவேல் நாடாரின் மக்கள். அவர்களை மறுதலிக்கச் செய்யவேண்டுமென்று தீர்மானித்த பகைவரும் கிறிஸ்துவைப் புறக்கணித்துவிட்ட மக்களிற் சிலரும், மறுபடியும் கிறிஸ்தவர்களை உபத்திரவித்தார்கள். எனவே, மேலும் சிலர் மருள விழுந்து விட்டார்கள். ஞானமுத்து ஐயர், இவையெல்லவற்றின் மத்தியிலும், கோவிலூற்று ஆலயத்தைக் கட்டி முடிப்பதிலேயே கண்ணுங் கருத்துமாக இருந்தார். சபை சிறுத்துவிட்டதால் ஆலயத்தைச் சிறியதாகக் கட்டினால் போதுமென்று அவர் எண்ணவேயில்லை; யாராவது அப்படிப் பேசிவிட்டால் மிகுந்த கோபம் கொள்வார் (H . Y . R . 1863). ஆனால், பணம்? அது கிடைப்பதுதான் மிகுந்த கஷ்டமாயிருந்தது. நீலகிரியிலும், பின் திருவாங்கூரிலும் பணியாற்றிய (கிளார்க் ஐயரின் சகோதரியான) மிஸ் கிளார்க் ரூ 465 கோவிலூற்று ஆலய கட்டுமானத்துக்காக அனுப்பினதாக மட்டும் ஒரு குறிப்பு உண்டு (டிசம்பர் 1863). ஆயினும் , ஞானமுத்து ஐயர் ஆலயத்தைக் கட்டிமுடிப்பதில் முழுமூச்சுடன் உழைத்து டிசம்பர் 1868 - ல் வெற்றி பெற்றார். கோவிலூற்றிலும் அசைவுண்டாயிற்று. எழுபெத்தேழுபேர் ஞானஸ்நான ஆயத்தக்காரராகச் சேர்க்கப்பட்டனர். மறுதலித்தவர்களிலும் ஐவர் மனந்திரும்பினார்கள். இதற்கிடையில் கிளார்க் ஐயர் மாற்றப்பட்டு, அவருடைய இடத்தில் H . டிக்சன் ஐயர் நல்லூர் மிஷினரியானார்.
     டிசம்பர் 23, 1868 புதன்கிழமை கோவிலூற்று விழாக்கோலம் பூண்டது. புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட ஆலயம் அலங்காரங்களுடன் இலங்கியது. கோவிலூற்றின் சிறு சபையாரும், ஞானஸ்நான ஆயத்தக்காரரும், பக்கத்துக் கிராமச் சபைமக்களும் நல்லூர் ஆண் பெண் போர்டிங் பள்ளிகளின் மாணவ மாணவிகளும் - ஆக சுமார் 400 பேர் ஆலயத்தை நிறைத்துவிட்டார்கள். மதியம் 11 மணிக்கு பிரதிஷ்டை ஆராதனை ஆரம்பித்தது. நல்லூர் டிக்ஸன் ஐயர், டிக்ஸன் அம்மாள், சுரண்டை ஹானிஸ் ஐயர், ஹானிஸ் அம்மாள், உக்கிரன் கோட்டை அந்தோனி ஜேம்ஸ் ஐயர், சீவலசமுத்திரம் A . சாமுவேல் ஐயர், ஞானமுத்து ஐயர் அனைவரும் வந்திருந்தார்கள். விசாரணை உபதேசியார் T . சிமியோன் பிரதிஷ்டைக் கீதமொன்று தானே எழுதிக் சபையாருக்குக் கற்பித்திருந்தார். அது பாடப்பட்டது. ஹானிஸ் ஆகாய் 2:7 - ன் பேரில் பிரசங்கம் செய்தார். ஞானமுத்து நான்கு குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். டிக்ஸனும் சாமுவேலும் நற்கருணை ஆராதனை நடத்த, ஜேம்ஸும் ஞானமுத்தும் அதில் உதவி செய்தார்கள் . 180 பேர் நற்கருணை பெற்றார்கள்.
    ஆலயம் கிழக்கு முகம்; ஓடு போட்ட முகடு; கிராதியுடன் நீளம் 65 1/2 அடி, அகலம் 28 அடி, பக்கத்து அறைகள் 9X9 உள்ளே பத்துத் தூண்கள், எட்டு கமான் வளைவுகள், ஆலய அழகு கண்கொள்ளக் காட்சி. ஆலயத்துக்கான செலவு ரூ . 4500. அன்று அவ்வாலயத்தின் உபயோகத்துக்காகப் பிரதிஷ்டை பண்ணப்பட்ட நற்கருணைப் பாத்திரங்கள் முன்னாள் மிஷனரி கிளார்க் ஐயரின் அன்பளிப்பு. அன்று ஞானஸ்நானத்துக்கு ஆயத்தப்பட்ட எழுபத்தேழு பேரும், மறுதலித்து மனந்திரும்பின ஐந்துபேரும் திருச்சபை ஜாபிதாவில் பெயரெழுதப்பெற்றார்கள்.

நல்லூர் தின்னவேலியின் மிஷனரி மாவட்டங்களில் ஒன்றாகும். பூர்வீக போதகரான ரெவ. டி.ஞானமுத்துவின் பொறுப்பின் கீழ் அதன் மேற்குப் பிரிவு, என மொத்தம் 1102 கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள், அவர்கள் தங்கள் கிறிஸ்தவ சலுகைகளை மதிக்கிறார்கள் என்பது கிறிஸ்தவ பொருட்களுக்கு பங்களிப்பதில் அவர்களின் தாராள மனப்பான்மையால் காட்டப்படுகிறது. கடந்த ஆண்டு அவர்கள் ஒவ்வொருவருக்கும் சுமார் 8. 6. அணாக்கள் என 586 ரூபாய்க்குக் குறையாமல் வழங்கினர். இத்தொகையில் ஒரு பகுதி கோவிலூத்து-ல் உள்ள புதிய தேவாலயத்திற்கு வழங்கப்பட்டது, அதன் திறப்பு திரு. ஞானமுத்து இவ்வாறு விவரிக்கிறார்.

 இந்த தேவாலயம் அடிக்கல் நாட்டின நாளிலிருந்து பன்னிரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, 1868 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி புதன்கிழமை அன்று ஆராதனைக்காக திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் Rev. எச்.டிக்சன் மற்றும் திருமதி டிக்சன், Rev ஹானிஸ். Rev. ஏ. ஜேம்ஸ், நல்லூரின் ஆண்கள் மற்றும் பெண்கள் உறைவிடப் பள்ளி குழந்தைகள், முழு நல்லூர் மாவட்டத்தின் சபை ஊழியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள், முக்கியமாக மாவட்டத்தின் மேற்குப் பிரிவைச் சேர்ந்தவர்கள், மேலும் ஏராளமான புறஜாதி மக்கள் கலந்துகொண்டனர் . அப்போது அங்கு சுமார் 400 பேர் இருந்தனர். இந்நிகழ்ச்சிக்காக சபை ஊழியர்  இயற்றிய தமிழ்ப் பாடலுடன் காலை 11 மணியளவில் ஆராதனை  தொடங்கியது. Rev. டிக்சன் ஐயரவர்கள் செய்த ஏற்பாடுகளின்படி, Rev. ஜேம்ஸ் ஜெபங்களை வாசித்தார், நான் ஐந்து குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன், மெசர்ஸ் டிக்சன் மற்றும் சாமுவேல் ஆகியோர் நற்கருணை ஆராதனைக்கு முன் உள்ள ஆராதனை முறைமை படித்தார்கள், Rev. ஹானிஸ் ஆகாய் II - 7 இலிருந்து ஒரு சுவாரஸ்யமான பிரசங்கத்தை பிரசங்கித்தார். நான் தேவாலயம் மற்றும் அதன் நிதி மற்றும் செலவுகள் பற்றிய ஒரு சிறிய அறிக்கையை அளித்தேன். பின்னர் அங்கிருந்தவர்களிடமிருந்து 13, 2. 1 ரூபாய் வசூலிக்கப்பட்டது, அதன் பிறகு, Rev டிக்சன் மற்றும் Rev சாமுவேல், Rev. ஜேம்ஸ் மற்றும் நான் அவர்களுக்கு உதவியாக, நற்கருணை ஆராதனை நடத்தப்பட்டது. இந்த ஆராதனையில் 180 பேர் பங்கேற்றனர். அது உண்மையிலேயே மகிழ்ச்சியான நாள்.
 மிஷனின் நண்பர்கள் தேவாலயத்தின் விளக்கத்தை அறிய விரும்புகிறார்கள் என்று எதிர்பார்த்து, அதை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். Altar  தொடங்குவதற்கு:- அதன் மேற்கு முனையில் Altar அமைந்துள்ளது; அது கிழக்கிலிருந்து மேற்காக உள்ளது. 16 ½ அடி நீளம், வடக்கிலிருந்து தெற்கு வரை 12 ½ அடி அகலம், 15 ¼ அடி உயரம், மற்றும் இது ஓடு வேயப்பட்ட கூரையைக் கொண்டுள்ளது. கிழக்கிலிருந்து மேற்காக 45 அடி நீளமும், 14 அடி அகலமும், 19 ¼ உயரமும் கொண்டது; அதன் இரண்டு பக்கங்களிலும் நான்கு வளைவுகள், ஐந்து நல்ல வலுவான நீள்சதுரத் தூண்கள் அதற்கும் மற்றும் Altarக்கும் இடையில் ஒரு வளைவு கட்டப்பட்டுள்ளது, மேலும் இது ஒரு ஓடு வேயப்பட்ட கூரையைக் கொண்டுள்ளது. இடைகழிகள் ஒவ்வொன்றும் 49 அடி நீளம், 7 அகலம் மற்றும் 16 ¼ உயரம், மற்றும்: அதன் கூரை மொட்டை மாடியில் உள்ளது, மேலும் இவை மூன்றும் நேவ்வை விட உயரம் குறைவாக உள்ளன. இவை தவிர, இரண்டு பக்க அறைகள் உள்ளன, ஒவ்வொன்றும் ஒன்பது அடி சதுரம் மற்றும் பதினொரு அடி உயரம், இரண்டும் மொட்டை மாடியில் உள்ளன. வடக்கிலிருந்து தெற்காக 14 அடி அகலமும், 11 அடி நீளமும், 13 ½ அடி உயரமும் கொண்ட ஒரு தாழ்வாரம் உள்ளது, மேலும் இது வலுவான சுற்றுத் தூண்களின் மேல் கட்டப்பட்ட பெரிய மற்றும் இரண்டு சிறிய வளைவுகள் மற்றும் ஒரு மாடி கூரையைக் கொண்டுள்ளது. ஆலயத்தின் கிழக்குச் சுவரில் ஒரு சிறிய மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. முழு தேவாலயமும் அனைத்து பக்கங்களிலும் செங்கல் சுவர்களால் கட்டப்பட்டுள்ளது, சுவர்களில் உள்ள தேவாலயத்தின் நீளம் கிழக்கிலிருந்து மேற்காக 123 அடி மற்றும் வடக்கிலிருந்து தெற்கே அகலம் 100 அடி. கதவுகளும், ஜன்னல்களும், தரையும், Communion Rails, மற்றும் கதவுகளும் போடப்பட்டுள்ளன; மேலே விவரிக்கப்பட்ட ஆலயத்தின் உட்புறம் பூசப்பட்டுள்ளது; தேவாலயத்தில் ஒரு பிரசங்க மேடை, நற்கருணை ஆராதனைக்காண மேசை, ஆடைகள் வைப்பதற்கான ஒரு சிறிய மேசை, சபை ஊழியர்களுக்கான வாசிப்பு மேசை மற்றும் இரண்டு நாற்காலிகள் உள்ளன. இவ்வாறு தேவாலய கட்டுமான பணிகள் இதுவரை முடிவடைந்தது, அதில் ஆலய ஆராதனை சுதந்திரமாக நடத்தப்படலாம்.
   மேலே விவரிக்கப்பட்ட பணிகளுக்கான செலவு 4500 ரூபாய்க்கு குறையாமல் இருக்கும். இந்த கட்டிடத்தில் இவ்வளவு பணிபுரிந்த பயனாளிகள் மற்றும் மேலாளர்களுக்கு நன்றியுடன் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏறக்குறைய அனைத்து பெருமைகளும் பத்து ஆண்டுகளுக்கு மேல் மாவட்ட பொறுப்பாளராக இருந்த Rev. W. கிளார்க்கிற்கு நன்றி சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். Rev. கிளார்க் இந்த தேவாலயத்திற்கு ஜூலை 1856 இல் அடித்தளம் அமைத்தார், நான் கோவிலூத்து-ல் இருப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, Rev. கிளார்க் தனது மனதை செலுத்தி, இங்கிலாந்திலும் பிற இடங்களிலும் உள்ள தனது நண்பர்களின் உதவியைப் பெற்று, தேவாலயத்தின் சுவரின்  பெரும்பகுதியை முடித்தார். நடுப்பகுதி, பக்க அறைகள் மற்றும் தாழ்வாரத்தின் மாடி கூரைகளுக்கு மரங்களை கொண்டு வந்தார். 1862 ஆம் ஆண்டில் அவர் என்னிடம் கணக்குகளை ஒப்படைத்தார், அவருடைய ஆலோசனையின்படி, நான் என் பெயரிலும் இந்த சபையின் சில உறுப்பினர்களின் பெயர்களிலும், திருநெல்வேலியில் வசிக்கும் மக்களிடம்  ஒரு மனுவை அளித்தேன். அதற்குப் பதிலளித்த பல மனிதர்கள், சுமார் 180 ரூபாய்க்கு நன்கொடை அளித்தனர். இந்த அருளாளர்களில், தாராளமாக 100 ரூபாய் வழங்கிய தூத்துக்குடியைச் சேர்ந்த C. Cocq, Esq., குறிப்பாகக் குறிப்பிடப்பட வேண்டியவர். இதற்குப் பிறகு, Rev. கிளார்க், நீலகிரி மலைகளுக்குச் சென்றிருந்த Miss கிளார்க்கிடம், இந்த தேவாலயத்திற்காக கொஞ்சம் பணம் வசூலிக்கும்படி கேட்டுக் கொண்டார், மேலும் மிஸ் கிளார்க் அதன் சார்பாக ஆர்வத்துடன் பணியாற்றினார். மற்றும் பல்வேறு இடங்கள், திருவிதாங்கூர் ராஜாவின் சமஸ்தானத்தில் கூட, சுமார் 450 ரூபாய் வசூலித்தார்; அதனால் எங்களின் அடுத்த சிறந்த நன்றிகள் Miss கிளார்க் அம்மையார் அவர்களுக்கு. தற்போதைய மெட்ராஸ் பிஷப் டாக்டர் கெல், அவரது முதல் வருகையின் போது, ​​ஆலயத்திற்கு 100 ரூபாய் நன்கொடையாக வழங்கினார். அதன்பிறகு, அவர் இங்கிலாந்து புறப்படுவதற்கு சற்று முன்பு திருநெல்வேலி மிஷனுக்குச் சென்ற மூத்த ஐயரவர்கள், மதராஸ் தொடர்புடைய சர்ச் மிஷனரி சொசைட்டியின் உறுப்பினர்களில் ஒருவருமான Rev. F. G. லுகார்டின் ஆலோசனை மற்றும் பரிந்துரையால், ஒரு மனு எழுதப்பட்டது. என்னாலேயே, அவரால் எதிர் கையொப்பமிட்டு, சென்னை, திருச்சி, மதுரை மற்றும் பிற இடங்களில் வசிக்கும் கிறிஸ்தவ நண்பர்களுக்கு அனுப்பப்பட்டு, சுமார் 200 ரூபாய் வசூலிக்கப்பட்டது. மீண்டும் Rev. கிளார்க், எனது வேண்டுகோளின்படி, இங்கிலாந்தில் தாம் தங்கியிருந்த காலத்தில், 366. 8. 3 ரூபாயை, இந்த தேவாலயத்திற்காக சேகரித்து, சில வருடங்களுக்கு முன், இந்த தேவாலயத்தில் ஒரு நற்கருணை ஆராதனையை நடத்தினார், இப்போது, ​​நான் கேள்விப்பட்டபடி, ஆலயத்திற்கு  அவர் ஒரு மணியைப் வாங்கியுள்ளார், இதற்கு அவர் தனது சொந்தப் பணத்தில் ஒரு நல்ல தொகையைக் கொடுத்தார் என்பதும் எனக்குத் தெரியும். மேற்கூறிய அறிக்கை, Rev. கிளார்க் இந்த தேவாலயத்தின் சார்பாக மிகுந்த ஆர்வம் காட்டினார் என்பதையும், பெரும்பாலும் அவருடைய உழைப்பால் இதுவரை வேலை  முடிந்தது  என்பதை காட்டுகிறது. மேற்கூறிய நன்கொடைகள் தவிர, எனது நண்பர், கண்டியில் உள்ள கூலி மிஷனின் மூத்த குருவானவரான பி. பீட்டர், எனது வேண்டுகோளின் பேரில், இலங்கையில் உள்ள தனது நண்பர்களிடமிருந்து இந்த தேவாலயத்திற்காக 88 ரூபாயை    சேகரித்தார் என்பதை கூறிக்கொள்கிறேன் ; கடந்த எட்டு ஆண்டுகளாக எங்களிடம் 450 ரூபாய் திரட்டப்பட்டது, மாவட்ட முகவர்கள் மூலம் 25 ரூபாய் வழங்கப்பட்டது. மாவட்ட பொது நிதியில் இருந்து 35 ரூபாய் வழங்கப்பட்டது. 

தேவாலயத்திற்கு இன்னும் தேவைப்படுகிறது: வெளிப்புறத்தில் சில சுவர்-நிழல்கள், தரைக்கு பாய்கள், Altarல் போடப்பட்ட கண்ணாடி ஜன்னலுக்கு சில பாதுகாப்பு வளையங்கள், மற்றும் கதவுகள் மற்றும் ஜன்னல்களுக்கு வார்னிஷ் அடிப்பதால் மழை மற்றும் சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கலாம். இவை அனைத்தையும் செய்துமுடிக்க சுமார் 400 ரூபாய் செலவாகும். மேலும், கடைசியாக, பெரிய சபை இந்த தேவாலயத்திற்கு மிகப்பெரிய தேவை. இந்த தேவாலயம், விசுவாசத்தில் தொடங்கப்பட்டது என்று நான் நம்புகிறேன், மேலும் இது சுமார் 1500 மக்களைக் கொண்ட கிராமங்களின் மைய வழிபாட்டுத் தலமாக மாறும் என்ற எதிர்பார்ப்பில், மக்கள் அனைவரும் கடவுளிடம் திரும்பினால், அது போதுமானதாக இருக்காது. இந்த கிராமத்திலேயே சுமார் 400 பேர் இருக்கிறார்கள், அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறும்போது இது மட்டும் போதுமானதாக இருக்கும். இந்த தேவாலயம் தொடங்கப்பட்டபோது, ​​ஒரு செல்வாக்கு மிக்க கிறிஸ்தவ தலைவர் மற்றும் ஒரு நேர்த்தியான பெரிய சபை இருந்தது, இது ஒருவேளை தூண்டியிருக்கலாம். இதைத் தொடங்குவதற்கு பொறுப்பான மிஷனரி. ஆனால் அந்தத் தலைவர் விரைவில் இறந்துவிட்டார், மேலும் அவரைச் சார்ந்து உலகியல் கண்ணோட்டத்தில் இருந்த பலர் சபையை விட்டு வெளியேறினர். சபையின் சிறுமையின் காரணமாக, இது போன்ற ஒரு தேவாலயம், நல்ல மனிதர்களால் கூட, இந்த இடத்தில் விரும்பவில்லை என்று நினைத்தார்கள். மறுபுறம், கிறிஸ்துவின் எதிரிகள் அதை ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர். வேலை கைவிடப்படும், அவர்களுக்கு: அவர்களின் மிகுந்த மகிழ்ச்சி. பணிக்கான நிதியும் மிக மெதுவாக வந்து கொண்டிருந்தது. இந்த சிரமங்களின் காரணமாக, மனக்கவலையுடன், கலந்த எண்ணங்களுடனும் பணி மேற்கொள்ளப்பட்டது. நம்பிக்கை மற்றும் சந்தேகம். ஆனால் நிர்வாகிகள் கட்டாயப்படுத்தப்பட்டனர்! கர்த்தர் அந்த வேலையைச் செய்துகொண்டிருப்பதைக் காண, அதை மதிக்கும் மனதின் பலவீனத்தை வெளிப்படுத்தியதற்காக அவர்கள் தண்டிக்கப்பட்டனர். ஆராதனைக்காக அதைத் திறப்பது குறித்த பிரசங்கத்தின் வாசகமும், ஐயரவர்கள் கொடுத்த விஷயமும், எங்களுக்குத் தோன்றியது, யார் தற்போதைய நிலை குறித்து கவலையில் இருந்தனர். இந்த சபையின், கர்த்தர் இந்த தேவாலயத்திற்காக என்ன செய்யப்போகிறார் என்பது பற்றிய ஒரு தீர்க்கதரிசனம், அதாவது : அவர் செய்வார்! மக்களை உலுக்கி, இந்த வீட்டை மகிமையால் நிரப்பவும், அவர்களை இந்த தேவாலயத்தில் வழிபாட்டிற்கு அழைத்து வந்து, இந்த இடத்தில் அவர்களின் ஆன்மாவின் இரட்சிப்பை அழகூட்டுவதன் மூலம், அவர் ஏற்கனவே மூன்று குடும்பங்களை அசைத்துள்ளார், ஒன்று சற்று முன், மற்ற இரண்டு தேவாலயம் திறக்கப்பட்ட பிறகு. மேலும் இது, இந்த இடத்தில் ஆன்மாக்களின் வளமான அறுவடையின் ஊக்கமளிக்கும் அடையாளமாக நான் கர்த்தரில் நம்புகிறேன். [1]

  1. ^ Mariayavirntha Manikka Karkal by D A Chirstdoss