User:Edwinrajmuthappancode
'திருவெறும்பூர், ஆக.15: திருச்சி திருவெறும்பூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேசியக் கொடி ஏற்றிவைத்துப் பேசினார். அப்போது அவர், தினமணியில் வெளியாகியுள்ள இன்றைய கார்ட்டூனை சுட்டிக் காட்டி, நாட்டின் நிலையை அதுவே காட்டுகிறது என்று தனது பேச்சைத் தொடங்கினார். மேலும் அவர் பேசியதில்... இன்று நாட்டுக்கும் நம் மக்களுக்கும் முழுமையான சுதந்திரம் என்பது இன்னும் கிடைக்கவில்லை. நாட்டில் எங்கும் லஞ்சம் ஊழல் தலை விரித்தாடுகிறது. இன்றைய தினமணியில் வெளிவந்துள்ள கார்ட்டூனைப் பார்த்தாலே தெரியும். நம் நாட்டில் எத்தனை விதவிதமான ஊழல்கள் இருந்துள்ளன என்று தெரியும். அத்தகைய சூழ்நிலையில் இன்று சுதந்திர தினத்தை நாம் கொண்டாடுகிறோம். மதுரையில் முறைகேட்டில் ஈடுபட்ட குவாரிகளை இதுவரை அதிகார்கள்தான் சென்று பார்த்து வருகிறார்கள். அமைச்சர்கள் இதுவரை சென்று பார்க்கவில்லை. இது எதனால் என்பதைத் தெரிவிக்க வேண்டும். இந்த ஊழலில் கிராம நிர்வாக அலுவலர்கள் அதிகம் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அவர்களைப் பணி நீக்கம் செய்து கைது செய்யவேண்டும். இந்தக் குவாரிகளை மக்களிடமே ஒப்படைத்து நியாயமாக நடக்க வழி செய்ய வேண்டும். அரசே ஏற்று நியாயமாக நடத்தினால் இந்த முறைகேடுகளை சரிசெய்யலாம். வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கூட்டணி மாறும். மக்களுக்கு நன்மை செய்பவர்களுடன் தான் கூட்டணி. இலங்கைத் தமிழர்களுக்கு ஆட்சியில் இருந்தபோது திமுக ஒன்றும் செய்யவில்லை. இப்போது அரசியல் காரணத்துக்காக டெசோ மாநாடு நடத்தியிருக்கிறார். இதனால் தமிழர்களுக்கு ஒன்றும் கிடைக்கப்போவதில்லை. - இவ்வாறு பேசினார் விஜயகாந்த்.'