User:Glenkrish
தொழிலாளர் தேசிய சங்கம்
[edit]
தொழிலாளர் தேசிய சங்கம் 1965ஆம் ஆண்டு தொழிலாளர் தினமான மே முதலாம் திகதி ஹட்டனில் தொழிற்சங்கத் துறவி வீ.கே. வெள்ளையன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கை இந்திய காங்கிரசாக உருவாக்கப்பட்டு பின்னர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசாக உருமாற்றப்பட்ட அமைப்பு தொழிலாளர் நலனை விடுத்து முதலாளிகளின் கூடாரமாகப் பரிணமித்த போது, அங்கு தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்து வந்த வீ.கே. வெள்ளையன், சி.வி.வேலுப்பிள்ளை, ஜி.எல்.மோத்தா, ஜெயா பெரியசுந்தரம், டாக்டர்.இராமானுஜம், சோமசுந்தரம் மற்றும் ஜனாப் அஸீஸ் முதலியோர் தொழிலளர்களின் நலனுக்காக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிலிருந்து வெளியேறினர்.
இவர்கள் வெளியேறி பல அமைப்புக்களை உருவாக்கியும், அமைத்தும் செயற்பட்டனர். ஆனால் வீ.கே. வெள்ளையன், சி.வி.வேலுப்பிள்ளை ஆகியோரால் உருவாக்கப்பட்ட தொழிலாளர் தேசிய சங்கம் புதிய நடையில் வீறு கொண்டெழுந்தது. அதற்குக் காரணம் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத்திற்கு தொழிலாளியே தலைமை தாங்க வேண்டும் என்ற கொள்கையாகும்.
வீ.கே. வெள்ளையன் மலையகத் தொழிலாளர்களுக்கு ஒரு புத்தொளிப் பாய்ச்சி புதிய பாதைக்கு வழி காட்டினார். அவர் காட்டிய வழியில் மலையக உழைக்கும் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகள் ஏராளம். ஊழியர் சேவைக் காலப் பணம் வேறு ஊழியர் நம்பிக்கை நிதியம் வேறு என எடுத்துக் காட்டி ஊழியர் சேவைக் காலப் பணத்தினை தொழிலாளர்களுக்குப் பெற்றுக் கொடுத்த பெருமை வீ.கே. வெள்ளையனையே சாரும்.
தொழிலாளர் தேசிய சங்கம் கடந்து வந்த பாதையில் சின் கிளயர் வெள்ளையன் முரண்பாடு குறிப்பிட்டு கூறக் கூடியது. தொழிலாளர் சார்பாக கலந்துரையடல் ஒன்றில் ஏற்பட்ட முரண்பாடொன்றின் போது வெள்ளையனுக்கெதிராக வாய்ப் பூட்டுச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனை முறியடித்து தொழிலாளர்களின் பக்கமே நின்று செயற்பட்ட வெள்ளையன் தனக்கென குடும்பம் வைத்துக் கொள்ளாது இறுதி வரை தொழிலாளர்களுக்காகவே வாழ்ந்து 1971.12.02 அன்று அமரத்துவம் எய்தினார்.
தொழிலாளர் தேசிய சங்கம் கடந்து வந்தப் பாதையில் 1990ஆம் ஆண்டு முக்கியமானது. இதுவரை தொழிற்சங்கமாக இருந்த அமைப்பு 1990ஆம் ஆண்டு அரசியல் கட்சியாகப் பரிணமித்தது. 1999ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலின் போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், செங்கொடி சங்கம், ஜனனாயக தொழிலாளர் காங்கிரஸ் என்பன தொழிலாளர் தேசிய சங்கத்துடன் இணைந்து இலங்கை வம்சாவளி மக்கள் பேரணி என்ற அமைப்பை உருவாக்கி போட்டியிட்டு ஒன்பது ஆசனங்களைப்பெற்றுக் கொண்டது.