Jump to content

User:Muhammathm

From Wikipedia, the free encyclopedia

ஷெய்கு முஹீயத்தீன் அப்துல்காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு

ஷெய்கு அப்துல் காதிர் ஜீலானி [ அரபியில் : الشيخ عبد القادر الجيلاني ] ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உலகில் உள்ள எல்லா [1] இஸ்லாமியர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மார்க அறிஞ்சர் மற்றும் இஸ்லாமிய ஆன்மீகத்தின் தலைவர் ஆவார். எந்த காலமாக இருந்த போதும் இவரின் தலைமையிலேயே ஆன்மீக அரசாட்சி நடை பெற்று வருகிறது.

பிறப்பு

ஹிஜ்ரி 470 மார்ச்சு 19, 1077 வருடம் ரமலான் மாதம் திங்கட்கிழமை இரவு ஸஹர் நேரத்தில் ஈராக் நாட்டின் ஜீலான் என்னும் நகரை ஒட்டிய நீப் என்னும் கிராமத்தில் பிறந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் 11 வது தலைமுறையில் பிறந்த பேரப்பிள்ளையாவார்கள்.

தந்தைவழியில் ஹஸனியாகவும் தாய்வழியில் ஹுஸைனியாகவும் விளங்குகிறார்கள். இவர்களின் பரம்பரை ஒரு பரிசுத்தமான குடும்பம்.

தந்தையின் சிறப்பு

குத்பே ரப்பானி அப்துல் காதர் ஜீலானி (கத்) அவர்களின் தந்தை ஒரு நாள் கடும் பசியுடன் காட்டில் நடந்து செல்கிறார்கள் அப்போது ஆற்றின் கரையில் ஆப்பிள் பழம் ஒன்று தண்ணீரில் மிதந்து வருவதை பார்த்தார்கள் பசியின் கடுமையால் அந்த ஆப்பிள் பழத்தை எடுத்து சாப்பிட்டு பசி தீர்த்துக் கொள்கிறார்கள். பசிக்கு பின் ஒரு குற்ற உணர்வாக சிந்திக்கிறார்கள் இது யாருடைய ஆப்பிள் ’ எங்கிருந்து வந்தது நமக்கு இந்த ஆப்பிள் பழம் ஹலாலாக இருக்குமா இல்லையா என்று கேள்வி மேல் கேள்வியாக சிந்தித்து அந்த ஆறு ஒடிவரும் திசையை நோக்கி பல மைல் தூரம் நடந்து சென்று பார்க்கிறார்கள் இறுதியில் ஒரு வீட்டை அடைந்து அங்குள்ள ஆப்பிள் பழ மரத்தின் உரிமையாளரிடம் நடந்ததை குறிப்பிட்டு எனக்கு அந்த ஆப்பிள் பழத்தை ஹலாவாக ஆக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.


அதனாலேயே அவர்களுக்கு மாபெரும் தவசீலர், மெய் நிலை கண்ட ஞானி என்று பல பட்டங்கள் ஏற்பட்டன. கடமையான தொழுகைகளை முறைப்படி முடித்துக் கொண்டு அவர்கள் நபில் தொழுகைகளையும் தொழுது , குர்ஆனைப் பற்றி சிந்தனையிலும் இருப்பார்கள்.