User:Naguleswaran
பொதுவாக டோகோ மக்கள் இன்னமும் உள்ளூர் நம்பிக்கைகளையே நம்பிக்கொண்டு இருகின்றனர் .local beliefs. அதாவது பேய் ,பிசாசு ,போன்றவற்றில் நம்பிக்கை கொண்டும் அவற்றினை பகைத்துக்கொள்வதால் வரபோகும் வீண் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க விரும்பாதவர்களாகவும் இருகின்றனர். ஐம்பத்தியொரு சதவீதமான மக்கள் இவ்வகையே .தவிர இருபத்தியொன்பது சதவீத மக்கள் கிறிஸ்தவ மதத்தினை பின்பற்றுபவர்களாகவும் ,இருபது சதவீதமான மக்கள் முஸ்லிம் மதத்தினை பின்பற்றுபவர்களாகவும்இருகின்றனர் .இந்த மத விசயங்கள் கூட ஆரம்பத்தில் இங்கே வணிகம் செய்ய வந்தவ்ர்களினாலும் ,டோகோ பிரெஞ்சு ஆதிக்க கட்டுப்பாட்டின் கிழ கொண்டுவரப்பட்டமையினாலுமே பரப்பப்பட்டன .இல்லாவிடின் இன்று டோகோ என்கிற தேசமே ஒரு இருளடைந்த பூமியாகவும் ,வெளியுலகமே தெரியாத மூடநம்பிக்கை கொள்கைகளை மட்டுமே நம்பிக்க்கொண்டிருகின்ற மூன்றாம் தரப்பு நாடாக அறியப்பட்டிருக்கும் .நகர் புறங்களை அண்டிய சில கிராம பகுதிகளில் இன்னமும் நரபலி கொள்கைகள் கடைபிடிக்கப்படுவதாக சொல்லப்படுகின்றது .அதை பார்பதற்கு சிலநேரங்களில் நானும் முயற்சிகள் எடுத்துக்கொண்டாலும் ,தவிர்க்கமுடியாத ஒருசில காரணங்களினாலும் ,நரபலி என்பதின் செயல்வடிவ பரிணாமத்தை நேரடியாக காண்பதற்கு சக்தி இல்லைஎன்பதினாலும் இந்த மாதிரி விவகாரங்களை பிற்போட்டுக் கொண்டே வருகின்றேன் .குடும்ப வாழ்க்கை .இதைப்பற்றி சொல்வதாக இருந்தால் ஆணே குடும்ப தலைவனாகவும் ,எல்லா அதிகாரங்களை கொண்டபவனாகவும் ,முடிவுகளை எடுப்பவனாகவும் இருக்கின்றான் .பெண்கள் ஆண்களின் பிண்ணப்பட்ட அடிமை வலைக்குள்ளேயே இன்னமும் இருகின்றார்கள் .பதின் வயது திருமணம் என்பது இங்கு சர்வசாதாரணமானது . இங்கே பதினைந்து வயதில் குழந்தை பெற்றுக்கொண்டவர்கள் அநேகம் .டோகோவை பொருத்தமட்டில், ஒரு பெண் பருவமடைந்ததும் அவள் திருமணத்திற்கும் அதன் பின் கற்பமடைந்து பிள்ளை பெற்று வாழ்க்கையை தொடர்ந்து நடத்தி செல்வதற்கும் இசைவாக்கம் அடைகின்றாள் என்கின்ற வாதங்களே பெரும்பான்மை டோகோ சமூகத்திடம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது .சமகாலத்தில் பெண்கள் ஓரளவு படித்த சமுதாயமாக மாறிஇருகின்ற வேளையில் இந்த மாதிரியான கொள்கைகள் கொஞ்சம் குறைந்து போய் விட்டன .போன வாரம் கூட இங்கே ஆண்களின் அடக்குமுறைக்கு எதிராக ஆர்ப்பட்டம் ஒன்று பெண்களின் உரிமை வென்றெடுக்க உருவாக்கப்பட்ட சங்கத்தினால் இடம்பெற்றது .இருந்தாலும் அங்கே இருந்த சில ஆணாதிக்க வெறியர்களினால் அவர்களில் பல பேர் வல்கலவிக்கு உட்படுத்தபட்டும் கடுமையான வன்தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டும் போயினர் .இதை பெண்களின் தோல்வி என்று முழுதாக எடுத்துக்கொள்ள முடியாவிட்டாலும் ,இந்த மாதிரி பெண்கள் ஆண்களுக்கு எதிராக கிளர்ந்து ஆர்ப்பாட்டம் வரைபோய் அவர்களின் தாக்குதல்களுக்கு முகம் கொடுத்தமையே டோகோ பெண் இனத்தவர்களின் மறைமுக வெற்றியை பறைசாற்றி நிற்கின்றது .ஆண்களின் பாலியல் தேவைகளை பூர்த்தி தெய்வதற்க்கும்,குழந்தை பெற்றுக்கொள்வதற்கும் மட்டுமே பெண்கள் என்று அறியப்பட்டவர்கள் இன்று அலுவலக துறைகளில் கூட கால் பதிக்க ஆரம்பித்து விட்டனர் .