Jump to content

User:Noopura Gangai

From Wikipedia, the free encyclopedia
அருள்மிகு ஸ்ரீ இருளப்பசாமி 


மதுரை விராட்டிபத்து கோடாங்கி நாயக்கர் பரம்பரை கொண்டாடும் இருளப்பசாமி அருள்மிகு ஸ்ரீ இருளப்பசாமி இருளப்பசாமி

மதுரை விராட்டிபத்தில் கோடாங்கி நாயக்கர் குடும்பம் என்றாலே முதலில் எல்லோருக்கும் நினைவில் வருவது பரம்பரை பரம்பரையாக அவர்களால் கொண்டாடப்படும் அருள்மிகு ஸ்ரீ இருளப்பஸ்வாமி


பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கோடாங்கி நாயக்கர் வம்சத்தில் ஒரு மகனும் ஒரு மகளும் மட்டுமே பிறப்பதும் வழிவழியாக பிறக்கும் அந்த ஒரே ஆண்மகனை கோடாங்கி மகன் என்று அழைப்பதும் இந்த வம்சத்து வழக்கம். இந்த வம்சத்தில் பிறக்கும் ஆண்பிள்ளை மீது அருள்மிகு ஸ்ரீ இருளப்பஸ்வாமி மிக துடியாக வந்து இறங்கி அருளும் . அருள் வந்ததும் கண்கள் இரண்டிலும் ஆவேசம் கொப்பளிக்க பெருஞ்சத்தத்துடன் நெருப்புக்கங்குகளை அள்ளி உடம்பில் பூசிக்கொள்வதையும் அதை வாயில் போட்டு விழுங்குவதையும் பார்க்கும் போது பயமாகவும் இருக்கும். வயது வித்தியாசமில்லாமல் வயதில் மிக மூத்தவர்கள் உட்பட அனைவரும் பக்தியுடன் இந்த இருளப்பசாமியாடியின் கால்களில் கும்பிட்டு விழுந்து விபூதி வாங்குகின்றர். 21 சாமிகளையும் சுமக்கும் இந்த இருளப்பசாமியாடி கையால் வாங்கும் விபூதிக்கு மிகுந்த சக்தி இருப்பதை அனைவரும் அறிவர்.

குன்னணம்பட்டியிலிருக்கும் அருள்மிகு குருநாதர் - அங்காள ஈஸ்வரி அருள் பாலிக்கும் பெரிய கோயிலில் சாமி கும்பிடும் விராட்டிபத்து, பனைக்குடி ,லிங்கவாடி, அ. கோயில்பட்டி, ஆழம்பட்டி, T. கல்லுப்பட்டி, ஆண்டிபட்டி, தெப்பம்பட்டி, போடி, மார்க்கேயன் கோட்டை, பெரியகுளம், கரடிக்கல், குன்னணம்பட்டி, மேல உரப்பனூர், கீழ உரப்பனூர், குச்சனூர், மாடக்குளம், துவரிமான், கோட்டைமேடு, சுப்பிரமணியபுரம், ராமநாதபுரம், மேமங்கலம், மதுரை, திருச்சி, கரூர் மற்றும் சென்னை கல்பாக்கம் உட்பட பல ஊர்களிலிருக்கும் நாயக்கர், கவுண்டர், நாயுடு , சேர்வை, பிள்ளைமார், ஐயர், தேவர், சேர்வைகாரர், ஆசாரி, கோனார் மற்றும் மருத்துவர் ஜாதிகளைச் சேர்ந்த ஐநூறு குடும்பங்களும் விராட்டிபத்து கோடாங்கி நாயக்கர் வம்சத்தில் வரும் ஸ்ரீஇருளப்பசாமியாடிக்கு கொடுக்கும் மரியாதை எல்லோரும் அறிந்த ஒன்று.

   குன்னணம்பட்டி குருநாதர் - அங்காள ஈஸ்வரி திருக்கோயிலில் 18/3/2007 அன்று பங்குனி அமாவாசை இரவு 12 மணிக்கு மேல் "களரி பூஜை" செய்த அருள்மிகு ஸ்ரீஇருளப்பசாமியாடியாகிய  (விராட்டிபத்து கோடாங்கி நாயக்கர் பராம்பரை) உலக நாதன் களரி பூஜை முடித்து விடிய விடிய பக்தர்களுக்கு விபூதி கொடுக்கும்போது   ஒன்றரை மூட்டை விபூதிக்கு மேல் காலியானது என தெரிய வந்தது