Jump to content

User:Sjeevanandhakumar/sandbox

From Wikipedia, the free encyclopedia

த.லெனின் தோழர் லெனின் அவரது தந்தையின் பெயர் தட்சிணாமூர்த்தி அம்மாவின் பெயர் ராஜநாயகம் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் ஆட்காட்டிவெளி என்ற ஒரு சிற்றூரில் 1970 இல் அக்டோபர் மாதம் 16ஆம் தேதி பிறந்தார் குடும்பம் பொதுவுடைமை இயக்கம் சார்ந்த குடும்பம் என்பதால் இளம் வயதிலேயே அவருக்கு பொதுவுடமை சார்ந்த ஈர்ப்பு இருந்தது தந்தை ஆசிரியராக பணியாற்றியபோது பல பொதுவுடமை நூல்களையெல்லாம் அன்றைக்கு சோவியத் யூனியன் வழங்கி வந்த அந்த சோவியத்து பலகனி சிறுவர்களுக்கான நூல் அதேபோல சோவியத்து நாடு என்கிற வண்ணப் படங்களோடு வந்த அந்த நூல்களை எல்லாம் எனக்கு அளித்து படிக்க வைப்பார் இப்படியாக எனக்கு பொதுவுடைமைக் கொள்கையின் மீது ஒரு தாக்கம் ஏற்பட்டது நான் ஐந்தாம் வகுப்பு வரை ஆள்காட்டுவெளியில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆரம்பக் கல்வியைக் கற்றார் எடையூர் சங்கேந்தி என்ற ஊரில் உள்ள உயர் நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்புவரை பயின்றார் தன்பிறகு பன்னிரண்டாம் வகுப்புவரை மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் பயின்றார்.

வரலாறு
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அமைந்த திருவேடகத்தில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை அறிவியல் விலங்கியல் பட்டம் பெற்றார் தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றார் திருச்சி சட்டக் கல்லூரியில் சட்டத்தில் பட்டமும் பெற்றார் அதன் பிறகு அவர் தொடர்ந்து பொதுவுடைமை இயக்க குடும்பத்தால் வளர்க்கப்பட்ட காரணத்தால் பொதுவுடமை இலக்கியங்கள் அதனுடைய தத்துவ கூறுகள் சித்தாந்த போக்குகள் குறித்து தொடர்ந்து தெரிந்துகொள்வதற்கான ஆர்வம் உள்ளவராக இருந்தார்  ராகுல சாங்கிருத்தியாயனின்புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று ஒரு பெரும் விருப்பத்தில் அனைத்தையும் படித்தார் ரஷ்ய புரட்சி படிக்க வேண்டுமென்றால்  பிரெஞ்சு புரட்சி தெரிந்திருக்க வேண்டும் என்று  அப்போது அவரிடம் சொல்லப்பட்டது பிரெஞ்சு புரட்சியை முழுமையாக  11 ஆம் வகுப்பிலேயே வாசித்தார் அதற்குப் பிறகுதான் ரஷ்யப் புரட்சி சீனப் புரட்சி வியத்நாம் புரட்சிக் குறித்த நூல்களை எல்லாம் படிக்க ஆரம்பித்தார் இப்படி அவருள்ளே மானுட நீதிக்கான ஒரு சித்தாந்தமாக பொதுவுடமை சித்தாந்தம்  பதிவானது அரசியலில் அதிக ஈடுபாடு கொண்டவனாக இருந்தார். þ

மாணவர் பருவத்திலேயே சட்டக் கல்லூரியில் படிக்கும்போது அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் இணைந்து அதனுடைய திருச்சி மாவட்ட தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டார் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான அன்றைய பிரச்சனைகளுக்காக ஒரு கோரிக்கை மாநாடு மாநில அளவில் திருச்சியிலே திட்டமிட்டு நடத்தப்பட்டது அந்த மாநாட்டில் மிகச் சிறந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டது அதில் ஒன்றுதான் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வேண்டும் என்ற கோரிக்கை ஆகும் சட்டத் துறையில் புதிதாக படித்து பட்டம் பெற்று தொழிலுக்கு வரக்கூடிய இளம் வழக்கறிஞர்களுக்கு அரசு நிதிஉதவுகிற கோரிக்கை எப்படி மருத்துவ மாணவர்கள் கடைசி ஆண்டு அரசு அவர்கள் மருத்துவ உதவித்தொகை கொடுக்கிறதோ அதே போல வழக்கறிஞர் தொழிலை கற்றுக் கொள்ள அந்த விதத்தில் அரசு உதவிகளை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையாகும் இன்று இது ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பதெல்லாம் செய்தி சட்டக்கல்லூரியில் இளங்கலை சட்டம் பயின்ற போது அனைத்திந்திய மாணவர் பெரு மன்றத்தின்(AISF)மாநில அமைப்பாளராக பொறுப்பேற்றார்1997 இல் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளராக பொறுப்பேற்றார் அதற்கு பிறகு 2003 இல் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளராக பல்லாவரம் மாநாட்டில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டார் தொடர்ந்து அந்த இயக்கப் பணியில் இருந்தபோது தான் நிறைய இளைஞர்களுக்கான மாணவர்களுக்கான கல்விக்கான மருத்துவத்திற்கான பொதுத்துறை குறித்த நிறைய விஷயங்களை தேடி சேகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது 2001இல் அல்ஜீரியாவில் நடந்த உலக மாணவர் இளைஞர் விழாவில் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார் ஏறத்தாழ 140 நாடுகளைச் சேர்ந்த 14 ஆயிரம் பேர் அந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள் இது தனக்கு புதிய அனுபவமாக இருந்தது என்றார் அல்ஜீரியா பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தில் இருந்த நாடு அதற்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவில் நடந்த ம உலக இளைஞர் மாணவர் விழாவில் நான் கலந்து கொண்டார் இம் மாநாடு உலக ஜனநாயக இளைஞர் கழகம் (WFDY)உலக ஜனநாயக இளைஞர் அமைப்பின் வழியில் நடத்தப்படும் மாநாடுகள் ஆகும் 161 நாடுகள் கலந்து கொண்ட ஒரு மாபெரும் மாநாடு அங்கு ஏராளமான இன்னும் சொல்லப்போனால் ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்தவர்கள் நிறைய வந்திருந்தால் ஆப்பிரிக்க நாடுகளில் குறிப்பாக ஆப்பிரிக்க நாட்டின் பண்பாடு கலாச்சாரம் நாகரீகம் இவையெல்லாம் நாம் உணரக் கூடிய ஒரு இடமாகவே அவருக்கு அமைந்தது காந்தி தங்கியிருந்த இடத்திற்கு நாங்கள் சென்றோம் மரியாதைக்குரிய நெல்சன் மண்டேலா அவருடைய இல்லம் இன்றைக்கு நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ளது அந்த இடத்திற்குச் சென்றார் காந்தியின் போராட்டங்கள் எல்லாம் அதன் தலைநகரத்தில் 54 ஆவது மாடியில் ஒளிப் படங்களை வைத்திருக்கிறார்கள் வியப்பு தில்லையாடி வள்ளியம்மை, நாகநாத படையாட்சியார் ஆகியோரது நிழற் படங்களை கண்டார் தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்கான போராட்டத்தில் தமிழர்கள் கலந்துகொண்டது வீரஞ் செறிந்த போராட்டங்கள் குறித்த வரலாறு அந்த நிழல் படங்கள் மூலம் அவருக்குக் கிடைத்தது 2007 வியட்நாமில் உலக அளவில் நம்முடைய உலக ஜனநாயக இளைஞர் கழகத்தினுடைய (WFDY)மாநாடு அங்குநடந்தது அங்கே இந்திய பிரதிநிதியாக பங்கேற்றார். 2017 ஆம் ஆண்டு ரஷ்யாவில் சோச்சி நகரத்தில் நடைபெற்ற உலக மாணவர் இளைஞர் விழாவில் பங்கேற்றார் நேபாளம் கம்போடியா தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு அரசியல் ரீதியான பயணங்களை மேற்கொண்டுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக பஇப்போது மாநில நிர்வாக குழு உறுப்பினராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் ஜனசக்தி வார இதழின் பொறுப்பாளராக தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கிறார் எழுதிய நூல்கள் 1.இலங்கை+இந்தியா=இனப்படுகொலை 2.ஊழலும் உலகமயமும் கட்டுரை தொகுப்பு நூல் 3.காஷ்மீர்:கனவை சிதைத்த இந்திய அரசு 4.அரசியலமைப்புச் சட்டமும் குடியுரிமை திருத்தச் சட்டமும்

கடைசி இரண்டு புத்தகத்தையும்  என்சிபிஎச்  சிறு நூல் வரிசையில் வெளியிட்டுள்ளது
தொடர்ந்து ஜனசக்தியில் கட்டுரைகள் எழுதி வருகிறார் அத்துடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தொலைக்காட்சிகளில் நிறைய விவாதங்களிலும் பங்கேற்று வருகிறார்.

Cite error: There are <ref> tags on this page without content in them (see the help page).