Jump to content

User:Tmmk

From Wikipedia, the free encyclopedia

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

வரலாறு


வெறிச்சோடி கிடந்த சமுதாய வீதியில் ஆர்ப்பரிப்புடன் புறப்பட்ட தமுமுக, 1995 முதல் இன்றுவரை வீரிய நடையோடும், கூரிய பார்வையோடும் சரியான திசையில் சமுதாயத்தை வழிநடத்தி வருகிறது!

ஐம்பது ஆண்டுகளில் சாதிக்க முடியாத கனவுகளை பத்தாண்டுகளில் இறையருளால் நிறைவு செய்த சாதனை கழகத்திற்கு உண்டு. ஜனநாயகக் களத்தில் தமுமுக நடத்திவரும் உரிமைப் போராட்டங்கள் வெற்றியை நோக்கி சமுதாயத்தை அழைத்துச் செல்கின்றன.

தனித்துவமிக்க போராட்டங்கள், தனிநபர் துதிபாடல் இல்லாத தலைமைத்துவம், அதிகார மிரட்டலுக்கு அடிபணியாத போர்க்குணம், லட்சிய உணர்வு கொண்ட ஊழியர்கள், இஸ்லாமிய வழியில் இலக்கை அடையத் துடிக்கும் வேகம் லி இவைதான் தமுமுகவின் சொத்துக்கள்! இவ்வியக்கத்தின் வீரியமிகு செயல்பாடுகள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்படுகிறது.

இடஒதுக்கீட்டிற்கான உரிமைப் போராட்டங்கள்

சமுதாயத்தின் உரிமைப் போராட்டங்களில் ஒன்றான இடஒதுக்கீட்டிற்காக தமுமுக நடத்திவரும் அறப் போராட்டங்களை சமுதாயம் பெருமையோடு ஏற்றுக் கொண்டிருக்கிறது.

1995லில் சென்னை இம்பீரியல் வளாகத்தில் கோரிக்கை மாநாடு

1999 ஜூலையில் சென்னையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற வாழ்வுரிமை மாநாடு

2004 மார்ச்சில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற தஞ்சையை திணறடித்த கோரிக்கை பேரணி

தஞ்சை பேரணியில் திறண்ட மக்கள் வெள்ளம்

2004 ஆகஸ்ட்டில் இடஒதுக்கீடு கேட்டு தடையை மீறி நடந்த முதல்வர் வீடு முற்றுகைப் போர்


முதல்வர் வீடு முற்றுகைப் போர்

பத்தாண்டுகளாக தொடர்ந்து நடந்துவரும் மேடை பிரச்சாரம்

என முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு கோரிக்கை அரசியல் விவாதமாக மாறியதற்கு இப்போராட்டங்களே காரணம் என்பதை பணிவன்போடு குறிப்பிடுகிறோம்.

பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டங்கள் 1992 டிசம்பர் 6லில் பாபரி மஸ்ஜித் பயங்கரவாதிகளால் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய தேசமே பீதியில் ஆழ்ந்தது. முஸ்லிம்கள் மீண்டும் அதே இடத்தில் பள்ளிவாசல் கட்டப்பட வேண்டும் என்றனர். தமிழகத்தில் 1995லில் கழகம் தொடங்கப்பட்ட பிறகு சமுதாய மக்களை ஒருங்கிணைத்து வலுவான போராட்டங்களை தமுமுக நடத்தி வருகிறது.

1995லில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் முழு கடையடைப்பு போராட்டம்

1996லில் கவர்னர் மாளிகை முற்றுகை லி கைது

1997லில் சென்னையில் தடையை மீறி பேரணி. ஆயிரக்கணக்கானோர் கைது.

1998லில் மதுரையில் கோரிக்கைப் பேரணிக்கு அனுமதி மறுத்த முதல்வரைக் கண்டித்து முதல்வர் வீடு முற்றுகைப் போர். ஆயிரக்கணக்கானோர் கைது.

1999லில் சென்னை, மயிலாடுதுறை, மதுரை, திருநெல்வேலி, மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற தர்ணா

2000, 2001 மற்றும் 2003லிஆண்டுகளில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பேரணி ஆர்ப்பாட்டம்

2002லில் மாபெரும் சுவரொட்டி, துண்டுப் பிரசுர பிரச்சாரம்

தமிழகத்திலும் தலைநகரத்திலும்

2004 லில் தமிழகம் முழுக்க மாவட்டத் தலைநகரங்களிலும், பெரு நகரங்களிலும் தடையை மீறி ஆர்ப்பாட்டங்களை நடத்தி ஆயிரக்கணக்கானோர் கைதாயினர்.

டிசம்பர்6, 2004, டில்லி போராட்டம்ஒருபுறம் கைதுகள் நடந்து கொண்டிருக்க மறுபுறம் இந்தியத் தலைநகர் டில்லியில் அதே டிசம்பர் 6 அன்று ஊர்வலத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் தமுமுக நடத்தியது. தமிழகத்திலிருந்து சொந்த செலவில் சென்ற தமுமுகவினரோடு, டில்லி முஸ்லிம்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். போராட்டத்தின் முடிவில் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கை தமுமுக தலைவர் மற்றும் போராட்டக் குழுவினர் சந்தித்து பாபர் மசூதியை மீண்டும் அதேஇடத்தில் கட்டக் கோரி மனுவை கையளித்தனர்.

தமுமுகவின் டில்லி போராட்டம் அகில இந்திய அளவில் மீடியாக்களால் எடுத்து செல்லப் பட்டது. இதனால் டிசம்பர் 6 பற்றிய விழிப்புணர்ச்சி வட இந்தியாவில் பற்றிப் பரவியது.

என பாபர் மஸ்ஜித் நில மீட்பில், இந்தியாவுக்கே வழிகாட்டும் போராட்டங்களை நடத்திய ஒரே இயக்கம் இந்திய அளவில் தமுமுக மட்டுமே.